குடித்துவிட்டு சிலர் அழுவதையும் சிரிப்பதையும் பார்த்து மிரண்டு போய் இருப்பார்கள். நான் சிரித்தால் நம்மையும் மற்றவர்கள் தப்பாக நினைத்து விட்டால் என்ன செய்வது என்ற பயமாக கூட இருக்கலாம்.
அல்லது சிரிப்பு என்பதை அவர்கள் மறந்திருக்க வேண்டும்.
ஒருவேளை மிக உயர்ந்த ஆழ்ந்த சிந்தனைகளில் மூழ்கி இருக்கக்கூடும்.
எதிர்காலத்தைக் குறித்த அச்சம், மன அழுத்தம் உடல் வேதனை உடல்நலக்குறைவு என்று எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம்.
அவர்கள் நம்மிடம் கேட்கலாம் நான் ஏன் சிரிக்க வேண்டும் என்று.
எத்தனையோ நகைச்சுவை கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேசும் நகைச்சுவையைக் கேட்டு எத்தனையோ பேர் மனக் கவலை மறந்து சிரிக்கிறார்கள்.
நகைச்சுவையாகப் பேசுபவர்களும் அதைக்கேட்டு சிரிப்பவர்களும் கவலை இல்லாத மனிதர்கள் இல்லை; வேலைவெட்டி இல்லாதவர்களும் இல்லை.
உள்ளே எண்ணற்ற கவலைகளை சுமந்துகொண்டு தானும் சிரித்து பிறரையும் சிரிக்க வைக்கும் எத்தனையோ இனிமையான மனிதர்களை நாம் பார்க்கிறோம்.
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
நோய் மட்டுமா மனக்கவலை அத்தனையும் பறந்து போகும்.
விரைவில் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்குத் தெம்பு கிடைக்கும்.
சொல்லவொண்ணாத துயரத்தில் இருப்பவர்கள் துன்பத்திலிருந்து சற்று வெளியே வந்து எட்டி நின்று தனது துன்பத்தைப் பார்த்து அதனை மதிப்பீடு செய்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.
அப்படி வெளியே வந்து எட்டி நின்று பார்க்கும் வழியை எப்படிக் கண்டறிவது.
எனக்குத் தெரிந்த ஒரே தீர்வு நகைச்சுவையாகத் தான் இருக்க முடியும்.
சிரிப்பவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியான வர்களும் இல்லை ;வெற்றி பெற்றவர்களும் இல்லை; மேலும் தனது ஆழ்மனத்தில் கவலைகளை தேக்கி வைத்துக்கொண்டு சிரித்து வாழ்கிறார்கள். சிரிப்பு மட்டுமே அவர்களை வாழ வைக்கிறது; தொடர்ந்து செல்ல வைக்கிறது.
இன்னும் சொல்லப்போனால் தற்கொலை வரை சென்றவர்கள் கூட மீண்டு வந்த பின் உடலும் உள்ளமும் தேற வேண்டுமென்றால் இனிமையான நகைச்சுவை காணொளிகள் புத்தகங்கள் இவற்றில் கட்டாயம் ஈடுபடவேண்டும்.
சிரிக்கத் தெரிந்த மிருகத்துக்கு மனிதன் என்ற பெயர் என்று சொல்வதுண்டு.
நாம் சிரிக்கவில்லை என்றால் நமக்கு என்ன பெயர் என்பதை ஊகித்துக் கொள்ளுங்க.
knjom siringa boss...😂😂😂
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக