பக்கங்கள்

வியாழன், 24 டிசம்பர், 2020


இப்பொழுது கல்லூரி படித்து கொண்டு இருக்கும் போது எப்படி தேர்வுக்கு படிப்பது? இதற்கு பதில் சொல்ல முடியுமா?

இந்த கேள்வியே தப்பு. கல்லூரியில் படிக்கும் நீங்கள் ஏன் தேர்வுக்கு படிக்கிறிர்கள். கல்லூரியில் நீங்கள் படிக்கும் பாடம் உங்களை உங்கள் துறை சார்ந்து அறிந்துக் கொள்ளும் ஒரு வழி தவிர வேறு எந்த இடத்திலும் உங்களுக்கு உங்கள் தேர்வு மதிப்பெண் உதவாது.

பாட திட்டத்தை தவிர்த்து நெறைய கற்றுக் கொள்ள முயலுங்கள். Additional course படியுங்கள்.course era,udemy போன்ற இணையதளங்களில் இலவசமாக படிக்கலாம். நீங்கள் எந்த துறை சார்ந்தவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு coding கற்றுக் கொள்ளுங்கள்.

சரி இப்ப நீங்க கேட்ட கேள்விக்கு வரேன். முதலில் இத மண்டையில் ஏத்தி விடுங்கள். கல்லூரியில் உங்கள் வினாத்தாளை யாரும் முழுவதும் படித்து பார்க்க மாட்டார்கள்.

தேர்விற்கு தயாராகும் நீங்கள் ஒரு கேள்வி படிச்ச அந்த கேள்வியோட heading அ தவிர மத்த எதையும் மண்டையில் ஏற்ற கூடாது.

கல்லூரியில் வினாத்தாள் திருத்தும் நபருக்கு ஒரு நாளைக்கு இத்தனை வினாத்தாள் திருத்த வேண்டும் என்ற டார்கெட் இருக்கும். அவுங்க அத தான் பாப்பாங்க (யாரும் கோபித்து கொள்ள வேண்டாம்)

அவ்வளவு அவசரமாக இருக்குறவங்களுக்கு உங்க பேப்பர் அஹ படிக்க டைம் இருக்காது. ஆனா நமக்கு மார்க் வேண்ணும். அவுங்க நம்ப பாக்குற அந்த குறைந்த நேரத்தில் அவுங்க கையில் இருந்து மார்க் வாங்கிடனும்.

Attractive அஹ எழுதனும். அதுக்காக தப்பு தப்பு எழுத சொல்ல. ஆனா நம்ப இந்த கேள்வி படிச்சி இருக்கோம் னு உணர்த்திடனும்.

எடுத்துக்காட்டு ipv4. னு ஒரு கேள்வி எடுத்தா

  • .What is ipv4 னு எழுதனும்
  • அதோட packet diagram போடனும் அதுல உள்ள parts அஹ explain பண்ணும்
  • அதோட types அத explain பண்ணும்
  • example இருந்த அத எழுதனும், comparison இருந்த அத எழுதனும்.
  • advantages, disadvantages எழுதனும் இப்படி தான் ஒரு கேள்வியை படிக்கனும் exam லையும் இப்படி தான் எழுதனும்

ஒரு கேள்வியை thus or since explained னு போட்டு தான் முடிக்கனும்.

இதெல்லாம் 16 மார்க் கேள்விக்கு. இதே two marks அஹ இருந்தா

  • what is ipv4 னு எழுதனும்
  • அதோட example குடுக்கணும் example இருந்தா.

Presentation ரொம்ப முக்கியம்.இது என்னோட self notes அதுனால red கலர் use பண்ணி இருக்கேன். நீங்க வயலெட், பிளாக், பிங்க் கலர் யூஸ் பண்ணலாம். சிலர் பிங்க் யூஸ் பண்ணா கூடாது னு சொல்லுவாங்க.நீங்க படிக்கும் போதே 10 மார்க் கேள்விக்கு 3 பக்கம் எழுதுற மாறி தான் படிக்கனும்.

கேள்விக்கு மார்க் தகுந்த மாறி மட்டுமே படியுங்க, எழுதுங்க. கேள்விக்கு சரியா பதில் சொல்லிட்டேன் னு நினைக்கிறேன்.

நன்றி

Shree

செவ்வாய், 22 டிசம்பர், 2020

tnpsc update

 Tnpsc update

  • குரூப் 1 தேர்வில் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
  • 9.15 மணிக்கு பிறகு யாரும் தேர்வு அறைக்குள் அனுமதிப்பட மாட்டார்கள்.தேர்வர்கள் ஆதார் எண்ணை ஒரு முறை பதிவேற்றத்தில் (OTR) இணைத்தால் மட்டுமே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். அப்போது மட்டுமே விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய முடியும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

1 .எல்லாத்தையும் படிச்சி முடிச்சிட்டு உறுதிமொழிக்கீழ உங்க கையெழுத்த போடுங்க.

2. உங்க details crt அஹ னு check pannikonga.

3.கருமை நிற பேனா மட்டுமே யூஸ் பண்ணணும்.

5.உங்க கைரேகை வச்சதுக்கு அப்புறம் உங்க கைய துடைச்சிடனும். உங்க கைரேகை எங்கையும் பேப்பர் ல பதிய கூடாது.

6.barcode சேதப்படுத்த கூடாது.

7.வினாதொகுப்பு எண் தவறாக குறிப்பிட்டால் உங்களது வினாத்தாள் சொல்லாது.

8.answer தெரில னா option E அஹ choose பண்ணணும். அப்படி எந்த option னும் choose பண்ணாம விட்டா உங்க பேப்பர் சொல்லாது.

.நன்றி

Shree

திரைக்கடல்

Important

 Important

நன்றி

Shree

வியாழன், 3 டிசம்பர், 2020

கல்லூரி படித்து கொண்டு இருக்கும்போது எப்படி கு தேர்வுக்கு படிப்பது ?

 நான் இப்பொழுது கல்லூரி படித்து கொண்டு இருக்கும்போது எப்படி  தேர்வுக்கு படிப்பது ? நீங்கள் பதில் சொல்ல முடியுமா?

நான் இப்பொழுது கல்லூரி படித்து கொண்டு இருக்கும்போது எப்படி குரூப்தேர்வுக்கு படிப்பது ? நீங்கள் பதில் சொல்ல முடியுமா?

மிக சரியான நேரம், நீங்கள் கல்லூரி படிக்கும் போதே இத்தகைய முடிவு எடுத்து இருப்பதற்கு எனது பாராட்டுக்கள். நாங்கள் எல்லாம் காலம் கடந்து ஞான உதயத்தில் இறங்கி, வேலையும், படிப்பை ஓரு சேர பயணித்து கொண்டு இருக்கிறோம்.

நீங்கள் கல்லூரி முதலாமாண்டு மாணவ/மாணவி ஆக இருந்தால், கூடுதல் சிறப்பு காரணம் நீங்கள் பள்ளி படிப்பை சமீபத்தில் தான் முடித்து இருப்பீர்கள். எல்லாம் fresh மண்டை ல இருக்கும். உங்களுக்கு படிப்பதற்கு கடினமாக இருக்காது.

கல்லூரி படிப்பில் இருக்கும் நீங்கள் குரூப் 1 க்கு தேர்வு எழுதலாம். இன்றில் இருந்தேபயிற்சியை தொடந்தால் கூட நீங்கள் கல்லூரியை முடிக்கும் போது தேர்வு எழுதி உடனே பணியில் சேரவும் முடியும்.

கல்லூரியில் படிக்கும் நீங்கள் தாராளமாக தினமும் இரண்டு மணி நேரம் செலவிடலாம். கரண்ட் affairs, Maths மிகவும் முக்கியமானது. வார இறுதி நாளில் கண்டுப்பாக வாரம் முழுவதும் படிப்பத்தை ஒரு திருப்புதல் செய்து விடுங்கள். திரும்ப திரும்ப படிக்கனும், திரும்ப திரும்ப உங்கள நீங்களே சோதிச்சு பாக்கனும்.

குரூப் 1 நா prepare பண்ணுறேன் அத மட்டும் தான் படிப்பேன் னு இருக்க கூடாது. குரூப் 2,4,VAO னு எல்லா SYLLABUS ம் 85–90 சதவீதம் ஒன்னு தான். சோ எல்லாம் question paper, syllabus, notes ம் பாருங்க.

Coaching போன தான் படிக்க முடியும் னு இல்ல. நெறைய source இருக்கு internet ல் படிக்க. நான் என்னோட tnpsc திரைக்கடல் களத்தில் shorts பதிவு செய்கிறேன் அதையும் உபயோகித்துக்கொள்ளுங்கள். Youtube ல் எண்ணற்ற வீடியோகள் உள்ளன. Tnpsc official website ல் கூட annual planner எல்லாம் பதிவு செய்கிறார்கள். அதையும் உபயோகித்துக் கொள்ளுங்கள்.

இப்ப எங்க இருந்து படிக்க வேண்டும் என்ற கேள்வி எல்லாருக்கு இருக்கும்?

நீங்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாட புத்தகத்தை கரைத்து குடிக்க வேண்டும்.

சரி இப்ப இன்னொரு கேள்வி வரும் எந்த பாட திட்டத்தை படிக்க வேண்டும் என்ற கேள்வியும் வரும்.

புதிய, பழைய பாட திட்டத்தை இரண்டையும் safer side ku படித்து கொள்ளுங்கள்.

இப்ப நீங்கள் எப்படி படிக்க வேண்டும் னு சொல்லிட்டேன், எங்கு இருந்து படிக்கனும் னு சொல்லிட்டேன். எப்படி படிக்கனும் னு சொல்லிட்டேன். Short notes, current affairs எல்லாம் நானே பதிவு செஞ்சிடுறேன். இப்ப நீங்க பண்ண வேண்டியது டைம் மேனேஜ்மெண்ட் பண்ணுறது தான். அப்புறம் படிக்க வேண்டியது.

எவ்வளவு மார்க் எடுக்கனும் னு ற கேள்வி வரும் குரூப் 4 க்கு 90/300 மதிப்பெண் எடுக்க வேண்டும் .

குரூப் 1

Prelims exam pattern

No of question 200

Total marks 300

General studies 175

Aptitude and mental ability 25

Marks to obtained 90

90 மார்க் எடுக்க நம்ப ஓட கூடாது. 275 நான் நம்ப target. நம்ப முன்னாடி பாஸ் ஆன ஆயிரம் பேர் இருப்பாங்க. அவுங்க எல்லாம் பின்னுக்கு தள்ளி விட்டு நம்ப வேல வாங்க வேண்டும். பாஸ் ஆன பல பேருக்கு நெறைய காரணத்தால் வேலை பறி போய் உள்ளது. ஏன் கம்மி மார்க் வாங்கிட்டு பயந்துட்டே இருக்குறது. நெறைய மார்க் வாங்கி மாஸ் ஆ வேலைய வாங்கிடுவோம்.

வாங்க சேர்ந்து படிப்போம், வெற்றியை கைப்பற்றுவோம்.

கேட்ட கேள்விக்கு பதில் அளித்துவிட்டேன் என்று நம்புகிறேன். மேலும் சந்தோகம் இருந்தால் கேட்கலாம்.

நன்றி

Shree

https://theeraikadal.blogspot.com

புதன், 2 டிசம்பர், 2020

MATHS 4

 கணிதம் 27.11.20

நாளை வார இறுதி நாள் நம்மை வடிவமைப்பதற்க்கு உகந்த நாள் அதனால் இன்னும் பன்மடங்கு முயற்சி செய்ய முற்படுவோம்.

அரசு வேலை மட்டுமே நம் இலக்கு.

நன்றி

Shree

தமிழ் 1

 தமிழ் 1

நூல் மற்றும் நூலாசிரியர்

6 to 10 th from தமிழ் book

6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ள நூல் மற்றும் நூலாசிரியர்களின் பட்டியல். போட்டி தேர்விற்கு மிக முக்கியமான ஒன்று.

எதோனும் பிழை இருந்தால் தெரிவிக்கவும்.

நன்றி

Shree

Polity shortcut

 Polity shortcut

(என் திறன்பேசி என் கையெழுத்து)

வாரத்தின் தொடக்க நாள், இன்னைக்கி முழு நாளும் படிப்புக்காக செலவு பண்ணலாம். சோம்பேறி தனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு ஓட துவங்குவோம். தேர்வு ல பாஸ் ஆகிட்டு வேலை ல சேர்ந்துட்டு அப்புறமா ஓய்வு எடுத்துக்கலாம். அரசு வேலை என்பது தான் நம்ப கனவு, இலட்சியம் எல்லாம். கனவ எட்டி புடிக்க ரொம்ப தூரத்துல இல்லை.

நன்றி

Shreeதிரைக்கடல்

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...