பக்கங்கள்

புதன், 21 ஜூலை, 2021

படித்ததில் பிடித்தது

 இருந்தபடியேதான் இருந்தாள்அந்த எழுபது வயதுக் கிழவி.

வருவோர் போவோர் தரும்இரண்டிரண்டு பிஸ்கட்கள்

அவ்வப்போது யாராவது தரும் – ஒருஅரை டம்ளர் தேநீர் சகிதம்

இருந்தபடியேதான் இருந்தாள்அந்த எழுபது வயதுக் கிழவி.

அந்த வங்கி வாசல் தேநீர் கடைஅவளின் வாடிக்கை வாழ்க்கை போல.

இடது கையில் இரண்டாயிரம்சொச்ச விலை ஷூவுடன்

இருந்தேன் நானும் அந்தஇடத்தில் ஒரு தேநீருடன்.

ஒன்றிரண்டு நிமிடங்கள்ஒருவாறாய் சிந்தித்தவன்

பர்சில் பளபளத்தபல வண்ண நோட்டுக்களில்

ஒரு நூறைக் கொடுத்துவிட்டு வந்துஒரு வாரம் ஆன பின்னும்


குனிந்து அணியும்போதெல்லாம்இன்னமும் உறுத்திக்கொண்டுதான் இருக்கிறதுஇந்த இரண்டாயிரத்து சொச்ச விலை ஷூ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...