பக்கங்கள்

வியாழன், 11 ஜூன், 2020

புன்னகை

காசா பணமா கொஞ்சம் சிரிங்க பாஸ். வாழ்க்கையில சில அடிகள் விழத்தான் செய்யும் அதை நினைச்சிட்டே இருந்தா எப்படி பாஸ். வாழ்க்கையை அப்படியே pause mode ல போட்டுட்டு அப்படியே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க.
சின்ன வயசுல எப்படி இருந்திருப்பீங்க ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு விளையாடிட்டு கூட இருக்குறவங்க கிட்ட எல்லாம் பேசிட்டு எப்படி இருப்போம் அப்பெல்லாம் .இப்ப என்ன ஆச்சு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி அந்த போனையே பார்த்துட்டு.

         கடினங்களை தாண்டித்தான் வாழ்வின் எட்டா தூரத்தில் உள்ள மகிழ்ச்சியை தொடமுடியும் .எல்லோருக்கும் ஒரு தேடல் தொக்கி நிற்கத்தான் செய்யும் அதற்காக வாழ்வில் கிடைக்கும் சிறு சிறு சந்தோஷங்களில் இழப்பது நியாயமா? என்ன தான் உங்கள் விழி தான் நீரை இரைத்தாலும் காயங்கள் வடுவாக மறைந்து இருக்குமே ஒழிய மறையப் போவதில்லை மனதில் புதைந்திருக்கும் விடயங்கள் புதைத்து விட்டு புதிதாய் புதையாமலிருக்கும் புதையல்களை களவாடிவிடு நின் புன்னகையினூடே.
✒ திரைக்கடல்_ஸ்ரீ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...