பிறப்பு
மு. கருணாநிதி, இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி (பிறப்பு ஜூன் 3, 1924) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் தமிழக முதல்வரும் ஆவார். 1969-ல் முதன் முறையாக தமிழக முதல்வரானார். மே 13, 2006-ல் ஐந்தாவது முறையாக முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
கருணாநிதி, தமிழ்த் திரையுலகில் கதை, உரையாடல் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். 'தூக்குமேடை' நாடகத்தின் போது எம். ஆர். ராதா 'கலைஞர்' என்ற பட்டம் அளித்தார். இன்றும் அப்பெயராலேயே ஆதரவாளர்களால் அழைக்கப்படுகின்றார். 2011 தமிழக தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் ஜூன் 3, 1924-ல் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி. கருணாநிதி, தனது பள்ளிப் பருவத்தில் நாடகம், கவிதை, இலக்கியம் ஆகியவற்றில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். நீதிக்கட்சியின் தூணாக கருதப்பட்ட பேச்சாளர் அழகிரிசாமியின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கருணாநிதி, தனது 13-வது அகவையில், சமூக இயக்கங்களில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
இளமை காலம்
கருணாநிதியும் அவரது மாணவர் அணித் தோழர்களும் பல்வேறு குடிசை வாழ் மக்களிடையே சென்று சமூக பணிகளிலும், விழிப்புணர்வு வேலைகளிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் அவர் துண்டுப் பதிப்பாகத் தொடங்கிய முரசொலி செய்தித்தாளாக, கட்சிப் பத்திரிகையாக உருவெடுத்தது. முரசொலி ஆரம்பித்த முதலாமாண்டு விழாவை தன் மாணவர் மன்ற அணித்தோழர்களான அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் ஆகியோருடன் கொண்டாடினார்.
1957-ல் நடைபெற்ற திமுக இந்தி எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாட்டில் நடுவண் அரசால் இந்தி திணிக்கப்படுவதை வன்மையாக எதிர்ப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13, 1957 அன்றைய நாளை இந்தி எதிர்ப்பு நாளாக பெருந்திரளான மக்களுடன் அமைதியான முறையில் கடைப்பிடிப்பது என முடிவானது.
இப்போராட்டத்துக்கு தலைமை தாங்கிய கருணாநிதி நடுவண் அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இவ்வாறு முழக்கமிட்டார்: "மொழிப்போராட்டம்.. எங்கள் பண்பாட்டை பாதுகாக்க, இது எமது மக்களின் தன்மானம் மற்றும் எங்களது கட்சியின் அரசியல் கொள்கை.. மேலும்இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு (எடுப்பு சாப்பாடு), ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு” என்று அவர் கூறினார்.
அக்டோபர், 1963, இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில் (மதராஸ்) கூட்டப்பட்டது. நடுவண் அரசின் புரிந்துகொள்ளாமையை உணர்த்தும் விதமாக இந்திய அரசியலமைப்பு தேசிய மொழிகள் சட்ட எரிப்பு போராட்டம் நடத்துவெதென மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. நவம்பர் 16 அன்று அண்ணாதுரையும், நவம்பர் 19 அன்று கருணாநிதியும் கைது செய்யப்பட்டு 25 நவம்பர் அன்று உயர் நீதிமன்ற ஆணையால் விடுவிக்கப்பட்டனர்.
போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் இவர் வெற்றிபெற்றார். 1957-ம் ஆண்டு சுயேச்சையாகவும் மற்ற அனைத்து தேர்தலிலும் திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டார். 1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. 1957-ம் ஆண்டு திமுக தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து கருணாநிதி குளித்தலையில் போட்டியிட்டு வென்று, முதல் முறையாக திமுக சட்டமன்றத்தில் அடியெடுத்து வைக்கவும், முதல் முறையாக கருணாநிதி தனது சட்டமன்ற வரலாற்றைத் துவக்கவும் வழிவகுத்தது.
1967-ல் நடைபெற்றத் தேர்தலின் மூலம் திமுக முதல் முறையாக தமிழக ஆட்சியில் பங்குபெற்றது. நாவலர் இரா. நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராகவும், கருணாநிதி பொருளாளராகவும் கட்சியில் உயர்வு பெற்றனர். தி.மு.க.வின் தொடக்க கால உறுப்பினர் கருணாநிதி. அவர், 1957-ம் ஆண்டிலிருந்து தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும், கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க.வின் தலைவராகவும் பதவி வகித்து வருகின்றார்.
தமிழகத்தின் முதல்வராக ஐந்துமுறை கருணாநிதி பதவி வகித்துள்ளார்.
1969-1971- அண்ணா மறைவுக்குப் பின் முதல் முறை ஆட்சி
1971-1976—இரண்டாவது முறையாக 1989- 1991- எம். ஜி.ஆர்., மறைவுக்குப் பின் மூன்றாம் முறை ஆட்சி 1996-2001—நான்காம் முறை ஆட்சி 2006-2011—ஐந்தாம் முறை ஆட்சி
அரசியல் வாழ்க்கை
இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிலவிய நீதி கட்சியின் உறுப்பினராக இருந்த அழகிரிஸ்வாமியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். ஒருமுறை, சமூகநல காரணங்களைப் பற்றிய அழகிரிஸ்வாமியின் உரையை கேட்ட கருணாநிதி அவர்கள், அதனால் ஊக்குவிக்கப்பட்டார். அவர் இளைஞர்களுக்கான உள்ளூர் சமூக அமைப்பை முதலில் உருவாக்கிய பின், சமூகப்பணி ஆதரவைப் பெற்றுத் தொடங்கினார். அவர், மாணவர்களுக்கான மாணவர் அமைப்பை, ‘தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கினார். இதுவே, அவர் சமூக காரணங்களில் ஈடுபட வழிவகுத்தது. இந்த காலக்கட்டத்தில், தனது வேலைகளை விளம்பரம் செய்ய பத்திரிக்கை என்னும் சக்தியை பயன்படுத்திக்கொள்ள விரும்பினார். இதன் காரணமாக, தனது சொந்த தலையங்க பத்திரிக்கையை உருவாக்கினார். 1942ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 10ஆம் தேதியன்று, அவர் தனது பத்திரிக்கையான “முரசொலியை” தொடங்கினார். அப்பொழுது முதல், இந்த பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் இருந்து வருகிறார். எழுத்துத்திறன் கொண்ட கருணாநிதி அவர்கள், தனது பத்திரிகைகள் மூலமாக தனது கட்சி உறுப்பினர்கள் பற்றியும், அரசியல் நிலைப்பாட்டையும் முன்வைத்தார். மேலும் ‘குடியரசு’, ‘முத்தாரம்’, ‘தமிழரசு’ போன்ற தனது இதர வெளியீடுகளிலும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறார். கள்ளக்குடியில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கருணாநிதி அவர்கள் ஒரு போராளியாக பங்கேற்றார். இதுவே, அவரது அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்புமுனையாக இருந்து, அவரை ஒரு முக்கிய தலைவராக உருவெடுக்க செய்தது. 1957ல், அவர் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து, முதல் முறையாக மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1961ல், தி.மு.க. கட்சியில் சேர்ந்தார், பின்னர் அதன் பொருளாளராகவும் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆண்டில் எதிர்க்கட்சி தலைவரானார். 1967ல் திமுக கட்சி ஆட்சிக்கு வந்த போது, கருணாநிதி அவர்கள், ஒரு சக்திவாய்ந்த செல்வாக்கு நிலைக்கு உயர்ந்தார்.
1967ல் தமிழ்நாடு முதலமைச்சராக பணியாற்றிய அண்ணாதுரை அவர்கள், திடீர் மரணம் அடைந்ததால், பதவிப் பொறுப்பை தொடர முடியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பின், அண்ணாதுரை வகித்த தலைமையமைச்சர் பதவியை மு.கருணாநிதி அவர்கள் ஏற்றார். அதன் பின், அவர் 1971, 1989, 1996 மற்றும் 2006 ல் மீண்டும் தலைமையமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 87 வயதான மு.கருணாநிதி அவர்கள், திமுக கட்சியின் ஆணிவேராக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மாநில அரசியலிலும், ஒரு முக்கிய பங்கு வகிக்கிறார்.
ஊழல் சானக்கியன்
தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1969-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது. அதை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று.
திமுகவின் ஸ்தாபகராக , பலம் பொருந்திய நேர்மையான தலைவராக விளங்கிய அண்ணாத்துரை 1969 பிப்ரவரி 3 ல் இறக்கிறார். அவர் இறந்தவுடன் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக இருக்கிறார். பின்னர் சிறிது நாட்களில் நடந்த பொதுக்குழுவில் எம்.ஜி.ஆரின் ஆதரவு மற்றும் சில பிரமுகர்களின் ஆதரவு காரணமாக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஏற்கனவே அவர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஆட்சி நிர்வாகத்தின் சகல நுணுக்கங்களை யும் அறிந்திருந்தார். இதன் தொடர்ச்சியில் ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி அதில் நுணுக்கமான, வெளியே தெரியாத வகையில் ஊழல் செய்ய வேண்டும் என்ற கலையை கொஞ்சம் கொஞ்சமாக கற்கத் தொடங்கினார்.
இந்நிலையில் அவர் ஆட்சியின் முதல் ஊழல் கூவம் நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் தொடங்கியது. அன்றைய காலகட்டத்தில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ரூ 3 கோடி ஒதுக்கப்பட்டது. இது செலவழிக்கப்படவில்லை. இந்த நிதி என்ன ஆயிற்று என்று கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கருணாநிதி பதிலளித்தார்.
அடுத்த நாள் கூவத்தில் முதலை என்று வதந்தி கிளப்பி விடப்பட்டது. சாக்கடையில் எப்படி முதலை வரும்? என்ற அடிப்படையான கேள்வியையும் தாண்டி இந்த வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது.
பின்னர் பணியாளர்கள் கூவத்தில் வேலை செய்ய பயப்படுகிறார்கள் என்றும் அதனால் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை. இதன் தொடர்ச்சியில் பெரும் ஊழல் என்பது குளோப் தியேட்டர் ஊழல். அண்ணாசாலையில் இருக்கும் இந்த தியேட்டர் கட்டிடம் வட இந்தியாவை சார்ந்த குஷால்தாஸ் என்பவருக்கு சொந்தமானது.

இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார். குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன். ஆனால், தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வரவு 8000 ரூபாய். ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினான்காயிரம். வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும், எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும், குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்.
வாரம் 5000 லாபம் பார்க்கும் வரதராஜப் பிள்ளை இதனை தக்க வைக்க எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார். இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு, பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.
இந்நிலையில் இதனை எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த வரதராஜ பிள்ளை அன்றைய ஆட்சியாளர்களை சந்திக்க விரும்பினார். அதற்காக அன்றைய திமுகவின் அதிகார மையமாக விளங்கிய முரசொலி மாறனை அணுகுகிறார். அவர் அதற்காக அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்க சொல்கிறார்.
உடனே வரதராஜ பிள்ளை அமைச்சர் ப.உ.சண்முகத்தை அணுகி இதற்கான தீர்வு என்ன என்று கேட்கும் போது அவர் சட்டதிருத்தம் கொண்டு வந்து உங்களுக்கே அந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளுமாறு செய்கிறோம். அதற்காக சில லட்சங்கள் தேவைப்படுகிறது என்றார்.
அதற்கான முன் பணமாக அன்றைய மதிப்பில் ரூ 30000 கொடுக்கப்படுகிறது. பின்னர் முதலமைச்சர் கருணா நிதியை சந்திக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவரை சந்திக்க சென்ற வரதராஜபிள்ளையிடம் கருணாநிதி பேரம் பேசுகிறார். பின்னர் சில பல ஆயிரங்கள் கைமாறுகின்றன.
இதன் தொடர்ச்சியில் உடனடியாக சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அது தான் நீண்ட காலமாக குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர் உரிமையாக்கிக் கொள்ளும் வகையிலான தமிழ்நாடு குத்தகைதாரர் சட்டம்.
இந்த சட்டம் உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதே வேகத்தில் அவருடைய ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் குளோபல் தியேட்டர் இடம் வரதராஜபிள்ளைக்கு சொந்தமானது.
இதை சர்க்காரிய கமிஷன் தன் விசாரணை அறிக்கையில் மிகத்தெளிவாக குறிப்பிட்டிருந்தது.
அன்றைய திமுக ஆட்சியில் அடுத்த பெரும் ஊழல் என்பது விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து அடிப்பது. அதாவது அன்றைய இந்திராகாந்தி அரசு விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக அந்த நிலங்களை பூச்சிகளிடம் பாதுகாக்க வேண்டி தனியார் நிறுவன ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சி மருந்து அடிக்க நிதி ஒதுக்கீடு செய்தது.
அதனை மாநில அரசுகள் தங்கள் சிறிய பங்களிப்புகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்றது. இதனைத் தொடர்ந்து சில தனியார் நிறுவனங்கள் கருணாநிதியை அணுகின.
வேறு ஒரு நிறுவனம் அன்றைய திமுகவின் மிக முக்கிய பிரமுகரான அன்பில் தர்மலிங்கத்தை அணுகியது.. அதற்காக அவர் சதுர அடி கணக்கில் கமிஷன் பேரம் பேசினார். அதன் பிறகு அது கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அது இறுதி செய்யப்பட்டு இறுதியில் அந்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டது.
இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சத்தியவாணி முத்துவிற்கே தெரியாமல் இத்தனை திரைமறைவு பேரங்களும் நடந்தன. இறுதியில் தன் பணிகளை ஆரம்பித்த அந்த நிறுவனமும் கமிஷன் அதிகரிப்பு, இயங்கு செலவு அதிகரிப்பு காரணமாக பணியை பாதியில் நிறுத்தியது. இதனால் அரசுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனையும் விலாவரியாக சர்க்காரியா கமிஷன் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
திமுகவின் வரலாற்றில் இன்றளவும் பேசப்படும் ஊழல் என்பது புகழ்பெற்ற வீராணம் ஊழல். அதாவது சென்னையின் குடிநீர் தேவையை சமாளிக்க கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீரை கொண்டுவரும் திட்டம் அது.
அதற்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை எடுத்து நெய்வேலி பக்கத்தில் அமைந்திருக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் கொண்டு வந்து சுத்திகரிப்பு செய்து பின்னர் அதை 198 கிலோமீட்டர் தூரம் தரைவழியாக குழாய் பதித்து சென்னைக்கு கொண்டு வரவேண்டும். அதற்காக பெரும் குழாய்களை பதிக்கவும், அதற்கு தேவையான கட்டமைப்புகளை செய்யவும் பல நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. இறுதியில் சத்தியநாராயணா பிரதர்ஸ் என்ற நிறுவனத்திற்கு டெண்டர் இறுதிசெய்யப்பட்டது.
இதனை விட தரம் வாய்ந்த, அனுபவம் வாய்ந்த நிறுவனங்கள் பல இருந்தும் சத்தியநாராயண பிரதர்ஸுக்கே டெண்டர் கொடுக்கப்பட்டது. இங்கு கவனிக்க வேண்டியது சத்தியநாராயண பிரதர்ஸ் என்பது இந்த பணிக ளுக்கான முதன்மை நிறுவனமல்ல. ( Core Company). மாறாக அது குழாய்பதிக்க வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்திருந்தது.
தலைமைப்பொறியாளரின் ஆலோசனையையும், ஆட்சேபனையையும் மீறி இந்த நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டது. அதற்கான காரணம் என்பது அதன் இயக்குநர் புருஷோத்தமன் முரசொலி மாறனின் தொழில்வகை நண்பர். இதற்கான பேரங்கள் எல்லாம் முதலில் மாறனிடம் தான் நடத்தப்பட்டன. இந்த திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு அன்றைய நிலையில் 16 கோடி. இதற்கான கமிஷன் தொகை முரசொலி மாறன் மூலமாக கருணாநிதியிடம் பல லட்சங்கள் வழங்கப்பட்டன.
மேலும் வேலை தொடங்கவும், குழாய் அமைக்கும் தொழிற்சாலை தொடங்கவும் முன்பணம் வேண்டும் என்று இந்த நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைத்தது. இதனடிப்படையில் நிதித்துறை செயலாளரின் எதிர்ப்பையும் மீறி இந்த நிறுவனத்திற்கு முன்பணம் ரூபாய் 3.9 கோடி வழங்கப்பட்டது. சிறிய நிறுவனமான சத்தியநாராயணா பிரதர்ஸ் இன் நடைமுறை மூலதனம் முழுவதும் கமிஷனுக்காகவே செலவழிக்கப்பட்டதன் காரணமாக இந்நிறுவனம் வீராணம் திட்டத்திற்கான வேலையை தொடங்கி முடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அது பதித்த திட்டத்திற்கான குடிநீர் குழாய்கள் எல்லாம் கீறல் விழத்தொடங்கின.
ஆங்காங்கே பணிகள் பாதியில் நின்றன. இறுதியில் தன் சோக நிலையையும், எதார்த்ததையும் எழுதி வைத்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போதைய பத்திரிகைகளில் பெருஞ் செய்தியாக வெளிப்பட இறுதியில் கமிஷன் வாங்கிய நிறுவனத்தின் மீதே கருணாநிதி குற்றம் சுமத்தி தன் நிலைபாட்டை நியாயப்படுத்தினார்.
இப்படியான பல ஊழல்கள் அவர் காலத்தில் நடந்தன. இதன் தொடர்ச்சியில் 1976 எமர்ஜென்சி காலத்தில் கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது. பின்னர் கருணாநிதிக்கு எதிராக எம்.ஜி.ஆர் கொடுத்த ஊழல் புகாரின் அடிப்படையில் இந்திரா காந்தி கருணாநிதியின் ஊழல்களை விசாரிப்ப தற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்.
அதில் கருணாநிதி ஆட்சிகால ஊழல்கள் விரிவாகவும், நுணுக்கமாகவும் விசாரணை செய்யப்பட்டன. இதற்காக பல தனியார் நிறுவனங்களின் அதிபர்கள், அரசு அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர். இறுதியில் பிரதமர் இந்திராகாந்தியிடம் அவர் தன் விசாரணை அறிக்கையை சமர்பித்தார்.
அதில் பல ஊழல்கள் நேரடியாக நிரூபிக்க முடியாத அளவில் விஞ்ஞானபூர்வமான வழிகளில் செய்யப்பட்டி ருக்கின்றன என்று சொல்லப்பட்டது.
இந்நிலையில் தன் ஆட்சிகால ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக எமர்ஜென்சி காலத்தில் தன் ஆட்சியை கலைத்து, தன் கட்சியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய இந்திரா காந்தியுடன் மீண்டும் கருணாநிதி கூட்டணி வைத்தார். இதன் மூலம் இந்த விசாரணை அறிக்கை கிடப்பில் போடப்பட்டது
. ஆனால் இன்றளவும் திமுகவின் மீதான களங்கமாக இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை இருக்கிறது.
சென்னை முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்யக் காரணமாக அமைந்த சென்னை நகர மேம்பால ஊழல் வழக்கை கைவிட சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகும் எனத் தெரிகிறது. கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகரில், மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த மேம்பாலங்கள் கட்டும் பணியல் பெரும் முறைகேடுகள் நடந்ததாக கூறி முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணாநிதியை 2001ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தது போலீஸ். நாட்டையே உலுக்கியது இந்த கைது சம்பவம். இவ்வழக்கில் கிட்டத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2005ம் ஆண்டு மே மாதம் 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவே இல்லை. பல காரணங்களால் வழக்கு இழுத்தடித்துக் கொண்டிருந்தது. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கு குறித்து ஆராயப்பட்டது. அதில், வழக்கில் தொடர்புடைய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் அரசுப் பணியில் இருப்பது தெரிய வந்தது. அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகள் விஷயத்தில் இது மேற்கொள்ளப்படவில்லை. மேலும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை, தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசு வக்கீல்கள் சிபிசிஐடியிடம் கருத்து தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து மேற்கொள்ளாமல் கைவிட சிபிஐடி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு வக்கீல்களின் கருத்துக்களையும் சேர்த்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எனவே விரைவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் எனத் தெரிகிறது
இறப்பு
வயது மூப்பு காரணமாக 2018ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி சென்னையில் காலமான கருணாநிதி மெரினா கடற்கரையில் புதைக்கப்பட்டார். ஆனால், அதற்காக அவர் நீதிமன்றம் செல்ல வேண்டியிருந்தது. மெரினாவில் அண்ணா சமாதி இருக்கும் இடத்தில் கருணாநிதியை புதைக்க அரசு அனுமதி மறுத்ததையடுத்து, திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறந்தும் வென்றார் கருணாநிதி என்று பலராலும் அப்போது கூறப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக