பக்கங்கள்

செவ்வாய், 2 ஜூன், 2020

ஜம் ஜம் கிண்று

நொடியில் 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்பட்டால் அடுத்த நொடியில் 25 லிட்டர் தண்ணீர் ஊற்றெடுக்கும்.

ஐந்தாயிரம் வருடங்களாக தண்ணீர் எடுக்கிறார்கள். ஆனால், அக்கிணற்றின் ஆழம் வெறும் 30 மீட்டர்.

2019 ல் முப்பது அடியில் தண்ணீர் அதுவும் நன்னீர் என்றால் ஆச்சரியம் தானே !!

சவுதி அரேபியாவில் மக்காவில் கஃபா அருகில் இக்கிணறு அமைந்துள்ளது.



சவுதி அரேபியா!! இது ஒரு பாலைவன நாடு. நதிகளே இல்லாத நாடு சவுதி அரேபியா. இங்கு குடிப்பது குளிப்பது எல்லாம் சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் தான். இங்கு எத்தனை அடி தூரம் ஆழ்துளை கிணறு அமைந்தாலும் தண்ணீர் எடுக்க முடியாது பெட்ரோலியம் வேண்டுமானால் வரும்.

இந்த கிணற்றின் வரலாறு ஆபிரகாம் காலத்தில் தொடங்குகிறது. ஆம் ஆபிரகாம் சமயங்களான யூதம், கிறிஸ்த்தவம். இஸ்லாம் இல் குறிப்பிடுகின்ற அந்த முதும்பெரும் இறைத்தூதர் ஆபிரகாம் (இப்ராஹிம்) இன் இரண்டாம் மனைவி இஸ்மாயில் வழியில் தோன்றியது தான் இஸ்லாம் சமயம்.

இப்ராஹிம் அவர்களின் மனைவி -ஹாஜரா. இவர்களின் மகன் இஸ்மாயில் (கைக் குழந்தை) உடன் மக்கா வருகிறார்கள். பசியின் தாகத்தால் குழந்தை இஸ்மாயில் அழ, குழந்தை குடிப்பதற்கு பாலோ தண்ணீரே இல்லாத நிலையில் தண்ணீரை தேடி பல இடங்களுக்கு தாய் ஹாஜரா அலைந்தார்கள்.

இறைவனிடம் பிராத்தனை செய்தார்கள், அப்போழுது தன்னந்தனியாக கிடந்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்த இடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. ஜம் ஜம் ( நில் நில் ) என்றவாறே மணலை குவித்து கைகளால் அணைக் கட்டினாராம் அந்த பெண்மணி …

சென்ற நூற்றாண்டில், ஒரு முறை ஜரோப்பா மருத்துவர்கள், சுகாதாரத்திற்காக இந்த கிணற்றினை சுத்தப்படுத்த வேண்டும் என்று சவூதி அரசுக்கு ஆலோசனை கூறினார்கள். இதை ஏற்றுக்கொண்ட சவுதி அரசு 8 அதி நவின ராட்சத பம்பு செட்டுளை கொண்டு தொடர்ந்து இரவும், பகலுமாக 15 நாட்கள் இந்த நீரை இறைத்தது. ஆனால் நீரின் அளவு குறையவில்லை. மாறாக நீரின் மட்டம் ஒரு அங்குலம் உயர்ந்து இருந்தது. ஒரு வினாடிக்கு 8 ஆயிரம் லிட்டர் என்ற அளவில், தினமும் 691.2 மில்லியன் லிட்டர் தண்ணீரை தொடர்ச்சியாக ராட்சத மோட்டார்கள் மூலம் இந்த கிணற்றுத்தண்ணீர் உறிஞ்சப்படுகிறது.

ஜம் ஜம் கிண்று அருகே எந்த தாவரமும் வளருவதில்லை.எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருந்துகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருந்துகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்கிறது



இக்கிணற்றை பற்றிய குறிப்புகள்.

ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள்
தண்ணீர்..
பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880
லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம்
லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள
மூலதனங்கள்….
சோடியம் – 133.00ml
கல்சியம் – 096.00ml
மக்னீசியம் – 038.80ml
புளோரைட்டு -000-77ml
பொட்டாசியம் – 043.03ml
நைத்திரேற்று – 124.08ml
டைகார்ப்நெட் – 124.00ml
சல்ஃபேட் – 124.00ml

இனி ஹஜ் பயணம் சென்று வரும் இஸ்லாமிய சகோதரர்களிடம் ஜம் ஜம் வாட்டர் கேட்டு வாங்கி அருந்துங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...