“இனிமேல் கவிதை எழுத போவதில்லை
நீ பேசு... நான் கேட்கிறேன்...!”
“துடிப்பதை விட உன்னை நினைப்பதற்கே
நேரம் சரியாக இருக்கிறது என் இதயத்திற்கு”
"எல்லோரையும் பார்க்க ஒரு பார்வையென்றும்
என்னைப் பார்ப்பதற்கு ஒரு பார்வையென்றும்
வைத்திருக்கிறாய்."
"நீ சாய்வதற்க்கென்றே வைத்திருக்கும் என் தோள்களில் யார்யாரோ தூங்கிச் சாய்கிறார்கள்பயணத்தில்."
"என்னைக் காத்திருக்க வைக்கவாவது நீ என் காதலியாக வேண்டும்
கடைசி வரை வராமல் போனால் கூட ஒன்றுமில்லை."
"நீ விளக்கேற்றினாய்.
விளக்கு உன் முகத்தை ஏற்றியது."
“உன் தைல விரல்களுக்கு ஏங்குகின்றன
என் தலைவலிகள்”
“என்னிடம் கொட்டிக் கிடக்கும் காதலை எதைக் கொடுத்தும் வாங்கிவிட முடியாது, காதலைத் தவிர!”
"செடியில் பூத்துக்கொண்டே உன் முகத்திலும்
பூக்க எப்படி முடிகிறது இந்தப் பூக்களால்."
"உனக்காகச் செய்ய நினைத்த எதையுமே
உன்னால்தான் செய்து முடிக்க
வேண்டியிருக்கிறது.வாழ்க்கையையும் கூட."
"உன் கூந்தலில் பூவாசனை வீசும்; தெரியும்.
இந்தப் பூவிலோ உன் கூந்தல் வாசனையல்லவா
வீசுகிறது."
"நாம் இருவரும் தனியாய் இருக்கையில்
இந்தக் கண்ணாடிக்கு ஏன் இத்தனை
கண்கள் முளைத்து விடுகின்றன."
"என்ன வேதனை... என் இரண்டு
இதழ்களையும் கொண்டு உனக்கு ஒரு
முத்தம்தானே தர முடிகிறது."
“சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் எவ்வளவு தூரம்?
நீ அருகில் இருப்பதற்கும், தொலைவில் இருப்பதற்கும் உள்ள தூரம் தான்!”
“அ’வுக்கு முந்தய எழுத்துக்கள் இல்லையெனினும்,
நான் “அ” எழுத பழகிய எனது கிறுக்கல்களெல்லாம் அ’வுக்கு முந்தைய எழுத்துக்களே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக