தமிழகத்தில் ஆங்காங்கே மழை பொழியத் தொடங்கி இருக்கிறது. மக்களுக்கு கொரோனாவை விட்டுவிட்டு மழையைப் பற்றி பேசத் தொடங்கியகியிருக்கிறார்கள். விவசாயிகள் நம்பிக்கையோடு விதைக்க தயாராகி இருக்கிறார்கள். மழைக்காலத்தின் போது நாம் மறக்கக் கூடாத சில விஷயங்கள் உண்டு.
1., இடி மின்னல் தாக்கும்போது திறந்த வெளியில் நிற்க கூடாது. உடனடியாக கான்கிரீட் கூரையிலான கட்டிடம்.உலோகத்தால் மூடப்பட்ட பேருந்து கார் வேன் போன்ற வாகனங்களில் தஞ்சம் அடைய வேண்டும்.
2., குடிசை வீட்டிலோ , மரத்தின் அடியிலோ, பேருந்து நிழற்குடையின் கீழோ நிற்கக்கூடாது.
3., டிவி, மிக்ஸி, கிரைண்டர், கணினி அலைபேசி பயன்படுத்துவதை தவிர்க்கவும். உபயோகத்தில் இல்லாத போது சுவிட்ச்களை அணைத்து வைக்க வேண்டும்.
4. தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை விட்டு விலக வேண்டும்.
5. மின்வாரியத்தின், மின்மாற்றிகள் துணை மின் நிலையத்திற்கு போடப்பட்ட வேலி அருகே சிறுநீர் கழிப்பதையும் அதையே செல்வதையும் தவிர்க்க வேண்டும்.
6. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லாமல் உடனடியாக மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
7. மின் கம்பிகள் அவற்றைத் தாங்கும் கம்பிகளை தொடர்வதையும் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.
8. மின்சாரத்தால் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக மெயின் சுட்விச்யை அணைக்க வேண்டும். அந்த தீயை தண்ணீர் கொண்டு அணைக்க கூடாது உலர்ந்த மணல், உலர்ந்த ரசாயன பொடி, கரியமில வாயு தீயணைப்பான்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக