இவ்வினாவை எழுப்பியவர்க்கு என்னுடைய கேள்வி ஏன் எந்த மாணவர்களும் இவர்களுக்கு எதில் ஆர்வமுள்ளது, நமது திறமையின் அடிப்படையில் உயர் கல்வியை தேர்ந்தெடுப்போம் என்ற ஏன் யாரும் சிந்திப்பதில்ல. முதலில் உங்களின் திறமையையும், ஆர்வத்தில் அடிப்படையில் உயர் கல்வியை தேர்வு செய்யுங்கள் என்பது எனது ஆலோசனை.
சரி கேள்விக்கு வருவோம். ஒரு அறிவியல் மாணவி அதவாது (இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல்) படித்த மாணவி எப்படி பி. காம், சி. ஏ படிக்க முடியும். 🤔🤔🤔🤔🤔.
உங்கள் துறை படிப்புகளே நிறைய உள்ளது.
பி. எஸ்சி இயற்பியல் படித்தால் isro வில் சேரலாம்.
பி. எஸ்சி எலக்ட்ரானிக்ஸ் படித்தால் பி. இ இசிஇ மாணவர்களுக்கு இணையான வேலை கிடைக்கும்.
பி. எஸ்சி aeronautical இதை படித்தால் எங்கோ சென்று விடுவீர்கள்.
இது எல்லாம் எனது பரிந்துரைகள்.
உங்களின் கேள்விக்கான பதில் நீங்கள் ஒரே நேரத்தில் பி. காம் சி. ஏ படிக்க முடியாது.
12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவைச் சாந்த மாணவர்களும் சி.ஏ மற்றும் சி.எஸ் படிப்புகளில் சேர்ந்து பயிலலாம் . பிளஸ் 2வில் அக்கோடன்சி குரூப் மாணவர்கள் மட்டுமல்லாது அறிவியல் மாணவர்களும் ஆடிட்டர் மற்றும் கம்பெனி செக்ரட்டரி ஆகலாம் . ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை கட்டாயம் படிக்க வேண்டும்.சி.ஏ., படிப்பில் சேர பிளஸ்-2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் நேரடியாக சேரலாம்.
பிளஸ்-2 முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் எப்படி சேர முடியும்?
பலரும் கருதுவதுபோல் பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவு முடித்தவர்கள்தான் சி.ஏ., படிப்பில் சேர முடியும் என்பது இல்லை.
எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு முன்பாக, ‘சி.ஏ. பவுண்டேஷன்’ படிப்பில் சேர வேண்டும். படிப்புக்காலம் ஓராண்டு ஆகும். நான்கு தாள்கள் கொண்டது
சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் போன்ற படிப்புகள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன?
பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சி.ஏ. படிப்புக்காலம் என்பது 4 ஆண்டுகளைக் கொண்டதாகும். பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., போன்ற வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. பவுண்டேஷன் பாடப்பிரிவில் சேராமலேயே, நேரடியாக சி.ஏ. இன்டர்மீடியேட் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். இது ஓராண்டு படிப்பு ஆகும்.
இதில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகள் உள்¢ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பாடங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு குரூப்பில் உள்ள பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே, அடுத்து நேரடியாக யாராவது ஒரு ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் நேரடிப் பயிற்சிக்குச் சேர்ந்து பயில்வது கட்டாயம்.
பயிற்சிக்காலத்தில் அவருக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.
அங்கு இரண்டரை ஆண்டுகள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் சி.ஏ. ஃபைனல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ. ஃபைனலிலும் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற பிறகு ஆடிட்டராக முறையாக பதிவு செய்து கொள்ளலாம்.
வணிகவியல் சாராத பட்டப்படிப்பை முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர முடியாதா?
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எந்த ஒரு பட்டப்படிப்பை முடித்தவரும் சி.ஏ. படிப்பில் சேரலாம். பி.காம்., போன்ற வணிகவியல் படிப்பை முடித்தவர்களுக்கு, சி.ஏ. படிப்பது கொஞ்சம் எளிமையாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 மணி நேரங்களாவது சி.ஏ. படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.
பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.காம்., போன்ற வணிகவியல் பிரிவை முடித்தவர்கள் 55 விழுக்காடும், வணிகவியல் சாராத இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கும் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ., படிக்க வேண்டுமெனில் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களைப்போல் சி.ஏ., ஃபவுண்டேஷன் பாடப்பிரிவு மூலமாகத்தான் உள்ளே நுழைய முடியும்.
பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர் இன் பதில் வைபவ் லக்ஷ்மி ·
தொழில் நிறுவன படிப்புகள்
அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன் ஒரே ஆண்டில், சி.ஏ. ஐ.சி.டபிள்யூ.ஏ மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.
,குருநானக் கல்லுரியில் பி.காம் (B.Com) சேரலாமா? சேரலாம்..ஆனால் கல்லூரியில் shift 1,shift 2 என்று இரண்டு விதமான நேரங்களில் பி.காம் படிப்புகள் உள்ளது.
shift 2 ல்
- department of b.com (general)
- department of b.com (corporate secretryship )
- department of b.com (Honours)
- department of b.com (information system management )
department of b.com (banking management)
என்று இத்தனை பிரிவுகள் உள்ளது .இதில் எதில் சேர்வது என்பது உங்களின் விருப்பம்.
நன்றியுடன்
வருங்கால பேராசிரியர் shree
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக