பக்கங்கள்

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

GATE

 ஒரு முதுகலை மாணவியாக இந்த பதிவை பதிவிடுகிறேன்.


பொறியியல் மாணாக்கர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கேட் தேர்வை தவர விடாதீர்கள். அனைத்து பொறியியல் மாணவர்களும் எழுதுங்கள். பாஸ், பெயில் என்பது முக்கியம் அல்ல. நீங்கள் அத்தேர்வை எழுதியுள்ளீர்கள் என்பதே உங்கள் ஒரு பிளஸ் தான்.

எம். இ படிப்பதற்கான நுழையவு தேர்வு மட்டுமல்ல கேட் தேர்வு. இத்தேர்வின் மதிப்பெண் இன்டர்வியூ ல் கூடுதல் மதிப்பெண்களை பெற்று தரும்.


மத்தியரசின் எந்த ஒரு பொறியாளர் பதிவுக்கும் இம்மதிப்பெண் அவசியம்.

நெகட்டிவ் மற்றும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டும் எடுக்க கூடாது.

நீங்கள் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மறுமுறை கேட் தேர்வு எழுதினால் அம்மதிப்பெண்ணும் கணக்கில் எடுக்கப்படும்.
 உதாரணம் :நான் 2020 ஆம் ஆண்டு கேட்டில்  2மார்க் எடுத்து, 2021ல் - 2 மார்க் எடுத்து இருந்தால் என்னுடைய மார்க் சீட்டில் 0 என்று மதிப்பெண் வரும்.

இத்தேர்வை கொண்டு நீங்கள் எம் . இ, பி. எச். டி சேர்ந்தால் ஊக்க தொகை வழங்கப்படும்.

நீங்கள் JRF, SRF பணிகளில் சேர்ந்தால் கேட் மதிப்பெண் அடிப்படையில் தான் ஊதியம்

வித் கேட் JRF :31,000+HRD

வித்ஆவுட் கேட் 25,000+HRD
(HRD ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும்)


நமது இலக்கு +VE மார்க் தகும். உங்கள் பிரிவின் மதிப்பெண்ணை பெற்றுவிட்டால் கண்டிபாக அதீத சலுகைகள் உடன் உங்களுக்கு வேலை உறுதி. 

என்னை பொருத்தமட்டில் முதலாமாண்டு முதலே பயிர்ச்சியை தொடங்குகள். கோட்சிங் சென்று படித்தால் அவர்கள் டிரிக்ஸ்  அண்ட் டைம் management சொல்லி தருவார்கள். நீங்கள் தான் கான்சப்டை புரிந்து கொள்ள வேண்டும். எனவே எக்காரணத்தை கொண்டும் பொறியியல் புத்தகத்தை எடைக்கு போடாதீர்கள்.சுய குறிப்பு எடுங்கள். 

அல் த பெஸ்ட்.
 

shree M.E

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...