1.முன்னாள் சோவியத் நாடான அசர்பைஜான் -அர்மீனியா 30 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய நாகர்னோ-காராபாக் பகுதியில் யுத்தம் நடந்து வருகிறது .
- ரஷ்ய அதிபர் புடின் அழைப்பை ஏற்று அசர்பைஜான் அதிபர் பர் இலாம் அலியேவ் , அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிருத்தப்பட்டது.
2.குறிப்பாக பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட வழிமுறைகளை மாநில அரசுகள் வலுப்படுத்த வேண்டும்.
- அதாவது பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் போலீஸார் கண்டிப்பாக சிஆர்பிசி 154 பிரிவு 1-ன் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண் சொந்த ஊரின் காவல் எல்லைக்கு அப்பால் பாதிக்கப்பட்டு அல்லது வேறு மாநிலத்தில் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டு, சொந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போலீஸார் உடனடியாக ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
- பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய தாமதித்தாலோ அல்லது மறுத்தாலோ ஐபிசி பிரிவு 166-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் உட்பிரிவு 326 ஏ,பி, பிரிவு 354,354 பி, 370, 376, 376ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிஆர்பிசி பிரிவு173-ன் கீழ் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீஸார் இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்குகளின் நிலவரம், விசாரணை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஐடிஎஸ்எஸ்ஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விசாரணை நிலவரம் கண்காணிக்கப்படும்.
- பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் சிஆர்பிசி பிரிவு164-ன் கீழ் குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் பதிவு பெற்ற அரசு மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
- மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் இறக்கும் தறுவாயில் இருந்தால், வாக்குமூலத்தை எழுத்து மூலமோ அல்லது வாய்மொழியாகவோ கேட்டு இந்திய ஆதாரச் சட்டம் 1872 பிரிவு 32(1) ன் கீழ் போலீஸார் பதிவு செய்ய வேண்டும்.
- பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து தடயங்களைச் சேகரித்தல், ஆதாரங்களைச் சேகரித்தல் போன்றவற்றில் விசாரணை அதிகாரிக்கும், மருத்துவர்களுக்கும் ஏற்கெனவே போதுமான வழிகாட்டல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
- இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், குறிப்பாக பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்தும் போலீஸார், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''.
3.அட்டப்பாடியில் ஓலைக் குடிசையில் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் பழங்குடி மாணவி அனாமிகா யூத் ஐகான் விருதுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிகழ்வுகள்
- 1958 – நாசாவின் முதலாவது விண்கலம் பயனியர் 1 சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இது சந்திரனை அடையாமலே மீண்டும் இரண்டு நாட்களில் பூமியில் வீழ்ந்து எரிந்தது.
- 1984 – சாலஞ்சர் விண்ணோடத்தில் சென்ற கேத்ரின் சலிவன் விண்ணில் நடந்த முதலாவது அமெரிக்கப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
பிறந்த நாள்
- 1902 – ஜெயபிரகாஷ் நாராயண், இந்திய அரசியல்வாதி (இ. 1979)
- 1916 – நானாஜி தேஷ்முக், இந்தியக் கல்வியாளர், செயற்பாட்டாளர் (இ. 2010)
- 1917 – வீக்தர் செர்கேயெவிச் சப்ரனோவ், சோவியத் உருசிய வானியலாளர் (இ. 1999)
இறப்பு
- 2014 – அப்பாஸ் அலி, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1920)
சிறப்பு நாள்
- பன்னாட்டு பெண் குழைந்தகள் தினம்
- புரட்சி நாள் (மாக்கடோனியக் குடியரசு)
இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மண்டல் .
போட்டி தேர்விற்க்கு தயாராகும் மாணக்கர்களுக்கு பயன் படும் என்று நம்புகின்றேன்.
அரசு வேலை மட்டுமே நமது இலக்கு.
நன்றி
அருமை, கண்டிப்பாக அரசு வேலை வாங்கினோம் brother
பதிலளிநீக்கு