பக்கங்கள்

ஞாயிறு, 31 மே, 2020

ஒரு கத சொல்லட்டா சார்

ஒரு காலத்தில் ஒரு சிறிய பிரேசிலிய கிராமத்தின் கடற்கரையில் ஒரு தொழிலதிபர் ஓய்வு எடுத்து கொண்டிருந்தார்.

கடற்கரையில் ஓய்வு எடுத்து கொண்டிருந்த போது, ​​ஒரு பிரேசிலிய மீனவர் ஒரு சிறிய படகில் கரையை நோக்கி வருவதை கண்டார்.

அவன் பால் ஈர்க்கப்பட்ட தொழிலதிபர், மீனவரிடம், “இவ்வளவு மீன்களைப் பிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என்று கேட்டார்.

மீனவர் - , “சில மணி நேரத்தில் பிடித்து விடுவேன் .”

"அப்படியானால், நீ ஏன் கடலில் இன்னும் அதிக நேரம் தங்கி அதிகமாக மீன் பிடிக்கக்கூடாது?" என்று தொழிலதிபர் ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பினார்.

"இது எனது முழு குடும்பத்திற்கும் உணவளிக்க போதுமானது" என்று மீனவன் கூறினான் .

"அப்படியானால், நாள் முழுவதும் நீங்கள் என்ன செய்வீர்கள்?"என்று தொழிலதிபர் கேட்டார்.

மீனவர் பதிலளித்தார், “, நான் வழக்கமாக அதிகாலையில் எழுந்து, கடலுக்குச் சென்று ஒரு சில மீன்களைப் பிடிப்பேன், பின்னர் திரும்பிச் சென்று என் குழந்தைகளுடன் விளையாடுவேன்.

பிற்பகலில், என் மனைவியுடன் ஒரு சிறிய தூக்கம், மாலை வந்தவுடன் எனது கிராமத்தில் உள்ள நண்பர்களுடன் குடிப்பதற்காக சேருவோம் - கிட்டார் வாசிப்போம், இரவு முழுவதும் பாடுவோம் , நடனமாடுவோம். ”

தொழிலதிபர் சற்றே மீனவனை பார்த்து "உனக்கு நான் ஒரு யோசனை சொல்கிறேன் !!!!!!!!உன் வாழ்க்கை சிறக்க என்றார்!!!!!! "

“நான் வணிக நிர்வாகத்தில் பிஎச்டி பெற்று இருக்கிறேன் .அதனால் உன்னை மிகவும் வெற்றிகரமான நபராக மற்ற என்னால் உனக்கு உதவ முடியும்." என்றார் தொழிலதிபர்

வழிமுறை - 1

இனிமேல், நீ கடலில் அதிக நேரம் செலவிட வேண்டும் மற்றும் முடிந்தவரை பல மீன்களைப் பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

வழிமுறை - 2

நீ போதுமான பணத்தை வங்கியில் சேமிக்க வேண்டும் , பிறகு ஒரு பெரிய படகு வாங்கி இன்னும் அதிகமான மீன்களைப் பிடிக்க வேண்டும்.

வழிமுறை - 3

விரைவில் நீ அதிக படகுகளை வாங்கி , உன் சொந்த நிறுவனத்தை அமைக்க வேண்டும் , பதப்பட்டடுத்தப்பட்ட உணவு மற்றும் விநியோகம் தொடர்பான உங்கள் சொந்த உற்பத்தி ஆலையை நீ அமைக்க வேண்டும் .

வழிமுறை - 4

பிறகு , நீ இந்த கிராமத்திலிருந்து வெளியேறி, தலைநகரமான சாவ் பாலோவுக்குச் சென்று அங்கு உன் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தை அமைக்க வேண்டும்.”

, "அதன்பிறகு?"

என்ன செய்வது என்று மீனவர் கேட்டார்

"உனக்கு கிடைக்கும் பலன்களை சொல்கிறேன் " என்று மிக பெருமையுடன் சிரித்து கொண்டே சொல்ல ஆரம்பித்தார் தொழிலதிபர்

பலன்கள் 1

" நீ ராஜாவைப் போல வாழலாம்."

பலன்கள் 2

சரியான நேரத்தில், நீ பங்குச் சந்தையில் உன் பங்குகளை விற்று , நீ பெரிய பணக்காரனாய் இருப்பாய் ."

, "அதன்பிறகு?"

என்ன செய்வது என்று மீனவர் கேட்டார்

தொழிலதிபர் கூறுகிறார், “அதன்பிறகு, நீ இறுதியாக ஓய்வு பெறலாம், மீன்பிடி கிராமத்தின் வீட்டிற்கு செல்லலாம், அதிகாலையில் எழுந்திருக்கலாம், சில மீன்களைப் பிடிக்கலாம், பின்னர் குழந்தைகளுடன் விளையாடுவதற்காக வீடு திரும்பலாம், மதியம் உன் மனைவியுடன் தூங்கலாம் மாலை வரும்போது, நீ உங்கள் நண்பர்களுடன் ஒரு மதுபானத்திற்காக சேரலாம், கிட்டார் வாசிக்கலாம், இரவு முழுவதும் பாடலாம், ஆடலாம்!" என்று தொழிலதிபர் கூறினார் .

மீனவர் சற்றே குழப்பம் அடைந்தவனாய் , "ஐயா நான் இப்போது அதைத்தானே செய்கிறேன்?" என்றான் .

தொழிலதிபர் திகைத்தார் !!!!!!!!!!!!!!

புத்தகம்

நம்ப ஏன் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அவ்வளவு ஒரு ஜாலியான விசியமா எடுத்துகுறது இல்ல னு என்னைக்காச்சும் யோசிச்சு இருப்போமா?

புத்தகம் ஒரு நல்ல தோழன் இல்லையா? நீங்க ஏன் அதை மறந்துட்டீங்க. ஒரு பெண்ண பார்த்து பேசும் போது கண்ண பார்த்து பேசனும் னு சொல்லுங்க. ஏன் அதை அப்படி சொல்றாங்க.

ஒரு பெண்ணையே கண்ணப் பார்த்து பேசும் போது நம்ப, நம்ப கூட பேசும் போது ஏதை பார்த்து பேசறது. உங்களுக்கு உங்க கூட பேசனும்மா சிம்பிள். ஒரு புத்தகம் வாங்கி அதை படிக்க ஆரம்பிங்க.

உங்க கூட பேசுறதுக்கு அது ஒரு நேரம் னு கூட வச்சிக்கலாம். கொஞ்சம் நேரம் உங்க கூட பேசி தான் பாருங்களேன். கொஞ்சம் kissava இருக்கும்.

ஒரு சின்ன கதை



ஒருவர் தினசரி கதாகாலட்சேபதிர்க்கு மாலை ஆனால் போய்் விடுவார். மனைவிக்கு கோபமான கோபம். தினசரி இப்படி போகிறாரே இவருக்கு என்ன புரியப்போகிறது என்று நினைத்து ஒரு பத்து நாள் போனபிறகு கேட்டே விட்டார்.

"ஏங்க இன்னைக்கு கதாகாலட்சேபத்திலே என்ன கதை சொன்னாங்க?/

' எனக்கு அந்த கதை சரியா புரியலே.'

அப்ப, நேத்திக்கு சொன்னது?'

'அதுவும் தான்.'

'இதுவரைக்கும் போய் கேட்டதிலேயே உங்களுக்கு புரிஞ்ச கதை எது?

'எதுவும் புரியலை'

அப்புறம் எதுக்கு தினமும் போய் வாரீங்க?' கேட்டுகொண்டே, மனைவி ராத்திரி சாப்பாட்டிற்கு பிறகு பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தார். அவர் கழுவிக் கொண்டிருந்த சல்லடையைக் காட்டி கணவர் இப்படி சொன்னார்:

அந்த வடிகட்டியில் நீ ஊத்தின தண்ணி எதுவும் நிக்கலை. ஆனால் சல்லடை சுத்தமாச்சு பாரு. அது போலதான் கதை புரியலைனாலும் கேட்கும்போது மனசு சுத்தமாகுது'

அது போலதான் புத்தகங்கள் படிக்க படிக்க , அது 2,3, நாளில் மறந்தாலும் சரி மனசில் ஏற்படும் எண்ணத்தில் சிறிது சிறிதாக மாற்றம் கொண்டு வருவதை பார்க்கலாம்.

படிக்க படிக்க அப்படி நமக்கு தேவையான சமயத்தில் வந்து, உதவிக்கரம் நீட்டும்.

புத்தகம் வாசிப்பது என்பது சுவாசிப்பது போலாகும்.


என்னைத் தேடி வந்தால் உன்னை உலகம் தேடி வரும் என்கிறது நூலகம்

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறது அந்த வீட்டில் ஒளி விளக்கு இருக்கிறது
பிளாட்டோ.

அவ்வளவு தான் கொஞ்சம்முயற்சி பண்ணி பருங்க......

சனி, 30 மே, 2020

நேரத்தை உபயோகமாக செலவிடுவதெப்படி

  1. Varsity by Zerodha & Investopedia - பணம் மற்றும் முதலீட்டை பற்றி தெரிந்துகொள்ள உதவும் தளங்கள்.
  2. TED Talks & Josh Talks - பல தரப்பட்ட துறைகளில் உச்சத்தில் உள்ள நபர்களை வரவேற்று அவர்களின் பயணங்களை, அவர்கள் சந்தித்த இடர்களை, அவர்கள் எடுத்த முடிவுகளை பகிர்ந்துகொள்ளும் அற்புத இரண்டு தளங்கள். ஜோஷ் டாக்ஸ் யுடூயுப் வலைத்தளத்தில் தமிழ் மொழியிலும் பார்க்கலாம்.
  3. Freerice.com - இது ஒரு எளிய கேள்வி பதில் தளம். நீங்கள் கூறும் ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் 10 அரிசி பருக்கைகளை உலக உணவு திட்டத்திற்கு இவர்கள் தானம் கொடுப்பார்கள்.
  4. Lumosity - இது உங்கள் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க அதற்காக தனிப்பட்ட வகையில் தயாரிக்கப்பட்ட சில விளையாட்டுகளின் மூலம் உதவும் தளம்.
  5. Learn a language - எளிய மற்றும் இலவசமாக ஒரு புது மொழியை கற்றுக்கொள்ள வேண்டுமா? இதோ டுயோலிங்கோ மூலம் இப்பொழுதே ஆரம்பித்திடுங்கள்.
  6. Khan Academy - உங்களுக்கு விருப்பட்ட துறையை தேர்வு செய்து அதில் உலக தரம் வாய்ந்த கல்வியை இலவசமாக கற்றிடுங்கள்.
  7. Lifehacker - உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தையும் ஆக்கபூர்வமாக செய்ய வேண்டுமா? இதோ இந்த அற்புத தளத்தை பயன்படுத்துங்கள்.
  8. zen habits - உங்கள் வாழ்க்கையை எளிமையான முறையில் மாற்றிட இந்த தளம் உங்களுக்கு உதவும்.
  9. Top Documentary Films - உங்கள் காலத்தை தொலைக்காட்சியில் அதிகம் இழப்பதாய் உணர்ந்தாள் இதோ அதற்கு மாற்றாக இந்த தலத்தில் பல்வேறு துறை சார்ந்த டாக்குமெண்ட்ரிகளை இலவசமாக பார்த்து மகிழுங்கள்.
  10. Grammarly - எழுதுவதில் ஆர்வம் உள்ளவரா? இதோ உங்களின் நண்பன். எழுத்து பிழையை திருத்தி, அங்கே அதற்கு பதில் உபயோகிக்க வேண்டிய சொற்களை நமக்கு காண்பிக்கவும் செய்கிறது.
  11. Goodreads - வாசிப்பதில் ஆர்வம் உள்ளவரா? இதோ இந்த தலத்தில் தாங்கள் படித்த, படித்துக்கொண்டிருக்கும், மற்றும் வருங்காலத்தில் படிக்கப்போகும் புத்தங்கங்களை பதிவிட்டு கொள்ளலாம். மேலும் ஒரு புத்தகத்தின் விமர்சனம் மற்றும் கருத்துக்களை பிறர் கூற நாம் தெரிந்துகொள்ளலாம். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த கருவியாக இது பயன்படும்.
  12. Free Diet Plans - ஆரோக்கியத்தில் அக்கறை உள்ளவரா நீங்கள்? இதோ தனிப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட டயட் பிளான்கள் இங்கே தெரிந்துகொள்ளலாம்.
  13. Cymath - இதோ கணக்கு பிரியர்களுக்கான தளம். இங்கே ஒரு கோட்பாட்டை கொடுத்தால் அதை படி படியாக எப்படி சமன் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

ஹோண்டா

முன்னொரு காலத்தில் “பிழைக்கத் தெரியாத முட்டாள்” என்று 18 வயது இளைஞனை அவனது அப்பா திட்டினார். தோல்விக்கென்றே பிறப்பெடுத்த துரதிர்ஷ்டக்காரன் என்று கேலி பேசினார்கள் அவனது நண்பர்கள். அந்த இளைஞன் அடைந்த தொடர் தோல்விகளை உலகத்தில் வேறு யாராவது அனுபவித்திருந்தால், எப்போதோ தற்கொலை செய்துக் கொண்டிருப்பார்கள். அத்தனை தோல்விகளையும் உள்வாங்கி, கடைசியில் பிரமாண்டமான வெற்றியை தனதாக்கிய அந்த மாமனிதன் தான் “சாய்க்கிரோ ஹோண்டா”.

தனது வாழ்க்கை அனுபத்தை சாறு பிழிந்து எடுப்பது போன்று “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று அந்த இளைஞன் சொன்னார். Toyota நிறுவனத்திற்கு piston (உந்துருளி) தயாரிக்கும் தொழிற்கூடம் உருவாக்க வேண்டும் என்பது மாணவர் சாய்க்கிரோ ஹோண்டாவின் கனவு. யாருக்காகவும் அவன்காத்திருக்கவில்லை. அப்பாவின் திட்டு , சக மாணவர்களின் கேலிகளுக்கு இடையே, மாதிரி உலோகம் உருக்கும் கூடம் ஒன்றை 1928ஆம் ஆண்டு உருவாக்கினார்.

இதற்காக இரவு பகலாக உழைத்தார். ஓராண்டு காலமாக கஷ்டப்பட்டு உழைத்து உருவாக்கிய, மாதிரி piston ஐ பெரும் எதிர்பார்ப்புடன் Toyota நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

எங்கள் எதிர்பார்ப்புக்குரிய தரத்தில் உனது piston இல்லை என்று நிராகரித்துவிட்டார்கள் பொறியியளாளர்கள். முதலாவது கனவுத் திட்டம் படுதோல்விஅடைந்த து. மனம் பாரமாக இருந்தது. திரட்டி வைத்த முதலீடு மொத்தமும் வீணாகியது. எல்லோரும் தங்களது கேலிகளை பொழிந்தார்கள். புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மனப் பக்குவத்தோடு, ஹோண்டா மீண்டும் முயற்சித்தார். மேலும் பல மாதங்கள் விடாப்பிடியாக உழைத்து அவர் உருவாக்கிய புதிய pistonமாதிரியை Toyota நிறுவனத்திற்கு எடுத்துச் சென்றார்.

அருமை என்று பாராட்டிToyota நிறுவனம் ஏற்றுக்கொண்டது. தயாரிப்புக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. மனதுக்குள் சிறிய வெற்றிக் களிப்பு கொண்ட சாய்க்கிரோ ஹோண்டா பெரிய தொழிற்கூடம் கட்டினால் தான் அவர்கள் கேட்கும் எண்ணிக்கையிலான piston தயாரிக்க முடியும்.

எனவே, கட்டடம் கட்டத் திட்டமிட்டார் ஹோண்டா. அப்போது ஜப்பான் நாடு உலகப் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்ததால், அங்கே வரலாறு காணாத சீமெந்து தட்டுப்பாடு. எவ்வளவோ முயற்சி செய்தபோதும் 10 மூட்டை சீமெந்துக் கூட கிடைக்கவில்லை. ஒழுங்காக ஏதாவது வேலையில் போய்ச் சேர்ந்துவிடு என அவரது அப்பா கூறினார், வாழ்க்கை முழுவதும் ரிஸ்க் எடுத்துக்கொண்டே இருப்பாயா என்றார் உயிர்நண்பன்.

இவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காது சீமெந்து கலவைக்கு இணையான மாற்றுக்கலவையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்தார் ஹோண்டா. ஆங்காங்கு கடன் வாங்கி சில மாதங்களிலேயே பெரிய தொழிற்சாலையை கட்டி முடித்தார்.
தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி piston தயாரிக்கும் தொழிலை அமர்க்களமாகத் தொடங்கினார். கூடவே இரண்டாம் உலகப்போரும் தொடங்கியது.

அமெரிக்கா போட்ட குண்டு, ஹோண்டாவின் தொழிற்சாலையில் பெரும் பகுதியை உடைத்து நாசமாக்கியது. ஹோண்டாவின் வாழ்க்கை முடிந்தது என்று பேசிக் கொண்டார்கள் நண்பர்கள். ஆனால்,தனது மொத்தத் தொழிலாளர்களையும் திரட்டிக்கொண்டு, தானே களமிறங்கி சேதங்களை சீர்செய்து, தொழிற்சாலையை மீண்டும் இயக்கிக் காட்டினார் ஹோண்டா. ஜப்பான் நாட்டில் நிலநடுக்கங்கள் அதிகம். ஒரு நாள் திடீரெனத் தாக்கிய நிலநடுக்கம் ஹோண்டாவின் தொழிற்சாலையைத் தரைமட்டமாக்கி விட்டது.

மொத்தத்தொழிற்சா லையையும் திருப்பிக்கட்ட முடியாத நிலை. வேறு வழியின்றி உடைந்த கருவிகள், மற்றும் மூலப்பொருட்களைக் கிடைத்த விலைக்கு Toyota நிறுவனத்திற்கு விற்பனை செய்தார் ஹோண்டா.இப்படிப்பட்ட நிலைமையில் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? எண்ணிப்பாருங்கள்.........
ஆனால் அப்போதைய நிலையில் ஹோண்டா கூறிய கருத்து.......
“நான் ஆசைப்பட்ட ஒரு திட்டம் தோல்வி அடைந்தால், துளிகூட கவலைப்பட மாட்டேன்… இருக்கிற நிலைமையை எப்படி மாற்றலாம் என்று தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிடுவேன்.” இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த நேரம் ஜப்பானின் பொருளாதாரம் சாம்பலாக்கப்பட்ட காலக்கட்டம், ஜப்பான் முழுதும் பெற்றோல் தட்டுப்பாடு. கார்கள் எல்லாம் முடங்கிவிட்டன.

எல்லோரும் நடக்கிறார்கள் அல்லது சைக்கிளில் செல்கின்றார்கள். சாய்க்கிரோ ஹோண்டா, வீட்டில் அமர்ந்திருந்தார். அருகில் சைக்கிள் நின்றது. சற்றுத் தொலைவில் புல்வெட்டும் இயந்திரம் இருந்தது. அந்தப் புல்வெட்டும் இயந்திரத்தில் உள்ள மோட்டாரைக் கழற்றி, இந்த சைக்கிளில் இணைத்தால் என்ன என்று ஹோண்டாவுக்கு ஒரு புத்தம் புது ஐடியா தோண்றியது.
அடுத்த நொடியில் காரியத்தில் இறங்கினார் ஹோண்டா. புல்வெட்டும் இயந்திர மோட்டாரைக் கழற்றி எடுத்து, தனது சைக்கிளில் அவர் பொருத்திய போது உலகின் முதல் மோட்டார் சைக்கிள் பிறந்துவிட்டது.



அதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக சுற்றி வந்தார் ஹோண்டா. அதேபோன்று எங்களுக்கும் செய்துகொடு என்று மொய்க்கத் தொடங்கினர் மக்கள்.அவரும் சளைக்காமல் செய்து கொடுத்தார். அதன் விளைவு என்ன ஆயிற்று????? அந்த ஊரில் மோட்டார் தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. இதையே பெரிய தொழிலாக மாற்றினால் என்ன என்று சிந்தித்தார் ஹோண்டா. கையில் பணமில்லை, வங்கிகள் கடன்தரத் தயாராகவில்லை. ஹோண்டா துரதிர்ஷ்டக்காரன் என்று எல்லோரும் கூறினார்கள்.

அப்போதும் கலங்கவில்லை ஹோண்டா. தனது தொழில் திட்டத்துக்கு பண உதவி செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து, ஜப்பானில் உள்ள 18 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்களுக்கு கடிதம் எழுதினார்.முதலீடு செய்யும் சைக்கிள் கடைக்காரர்கள், மோட்டார் சைக்கிள் விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுவார்கள் என உறுதி அளித்தார்.5 ஆயிரம் சைக்கிள் கடைக்காரர்கள் முன்வந்து பண உதவி செய்தனர். ஹோண்டா மோட்டார் சைக்கிள் நிறுவனம் உதயமானது.

முதலில் தயாரான மோட்டார் சைக்கிள் குறித்து விமர்சனங்கள் வந்தபோது, தானே உலோகம் உருக்கும் கூடத்தில் அமர்ந்து, அழகான வடிவமைப்புடன் அற்புதமான மோட்டார் சைக்கிள் வகைகளை கொண்டு வந்தார். அவமானகரமான தொடர் தோல்விகளுக்குப்பின்னர் பெரும் வெற்றி பெற்றார் சாய்க்கிரோ ஹோண்டா. இப்போது ஹோண்டா நிறுவனம் ஆண்டுக்கு சுமார் 2 கோடி மோட்டார் வாகனங்களை தயாரிக்கிறது. ஹோண்டா கார்களுக்கு மேற்கத்தேய நாடுகளிலும் பெரும் வரவேற்பு இருந்தது. எத்தனையோ வகை வகையான தயாரிப்புக்களில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது இந்த நிறுவனம்.

ஹோண்டா தயாரிப்புகளைப் பார்க்கும் போதெல்லாம் அனைவருக்கும் நினைவுக்குவருவது, அதன் மாமனிதன் சாய்க்கிரோ ஹோண்டா தனது வாழ்க்கை அனுபவங்களைச் சாறுபிழிந்து சொன்ன வார்த்தைகள்தான்

: “வெற்றி என்பது 99 சதவீத தோல்வியே” என்று


 

ஃபோனில் வைத்துக் கொள்ள கூடாத செயலிகள்

ஒன்றா இரண்டா…… நிறைய இருக்கின்றன…….

கிட்டத்தட்ட பெரும்பாலான செயலிகள் நம் பயன்படுத்த கூடாதவை தான். முன்பெல்லாம் செயலிகள் கேட்கும் ஒரு சில அனுமதிகளை நிராகரிக்க இயலும். ஆனால் இப்போது அனைத்திற்கும் அனுமதி அளிக்காவிடில் அவை செயல்படமறுக்கின்றன என்பதை அறிந்த உடன் நான் பெரும்பாலும் செயலிகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்த்துவிட்டேன்.

வைத்துக்கொள்ளக்கூடாத செயலின்களெனில் :

TRUCALLER (அதன் இயக்கபின்புலம் சிரிப்பான ஒன்று என்றாலும் நூதனமாக பயன்பாட்டாளர் தகவல்களை சட்டரீதியாகவே திருடியது கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று

Tik Tok (குறிப்பாக பெண்களுக்கு ) நாம பதிவேற்றும் எந்த ஒரு வீடியோவிற்கும் copyrights கிடையாது என்பதால் யார் வேண்டுமானாலும் உங்கள் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து தவறாக பதிவிடலாம். ஆபாச வலைத்தளங்களின் பார்வையில் டிக் டாக் செயலி முதலிடத்தில் உள்ளது.. ஆகவே உஷார்… ..


Zoom : காணொளி காட்சிகளை மிக எளிமையாகவும் தெளிவாகவும் செய்யும் பொருட்டு உருவாக்கபெற்றது. தற்போது, ஹாக்கர்கள் உலவுவதாக தகவல்.
Telegram

YouCam Perfect

B612 (இவை நம் அனுமதியில்லாமல் கேமராவை தானே மறைமுகமாக இயக்குகிறது என நிறைய புகார்களை கேட்டேன்)
மேலும் Facebook, Whatsapp என ஏராளம். டிஜிட்டல்மயமானதும் நம் தனிமையெல்லாம் தகர்ந்துபோனது. UC Browser போன்ற மூன்றாம் தேடுதல் தளங்களில் செயலி பதிவிறக்கங்களை தவிர்த்தல் வேண்டும். பிலே ஸ்டோரிலும் ரேட்டிங் நான்குக்கு கீழ் உள்ளதெனில் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். (முக்கியமாக tinder போன்ற டேட்டிங் செயலிகள். அனைத்தும் போலியானவை. நம் கைபேசியின் RAM எந்த அளவுக்கு வல்லமை உடையதோ அதே அளவு வேகத்தோடு வைரஸ் பரவும். ஆகவே குறைந்த RAM கொண்ட கைப்பேசிகளை பயன்படுத்துவது சிறப்பு.


பாதுகாப்பாக இருப்போம். 

திங்கள், 25 மே, 2020

AGRICULTURE

CROP PRODUCTION AND MANAGEMENT:

AGRICULTURE

                           when the plants of same kind are cultivated at one place on a large area are called crops.

example:wheat

different types of crops are  classified as
  • cereals
  • vegtables
  • fruits
these crops are classified on the basis of season which they grow.climatic condition like temperature,humidityand rainfall.but they will vary from one place to another. varity of crops are grown in different part of the country .they are classified in two types ,they are

  • Kharif crops
  • Rabi crops
Kharif crops
  •  crops which grown in rainy seasons.
  •  these plants grown  in the period of June to September.
  •   example :paddy,maize,groundnut and cotton
  •    these types of crops required huge amount of water so these types of crops are cultivated in rainy seasons.
Rabi crops

  • crops which grown in winter seasons.
  •  these plants grown  in the period of oct to march.
  • ex:wheat,gram,pea,mustards ,linseeds.
  • these types of crops required less amount of water so these types of crops are cultivated in winter seasons.
rest of seeds like pluses and vegetables are grown in summer seasons.

CROP PRODUCTION


In agriculture crop production practices in 
  • prepration of soil
  • sowing
  • adding manure and fertilizers
  • irrigations 
  • productions from weeds
  • harvesting 
  • storage

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...