பக்கங்கள்

புதன், 29 ஜூலை, 2020

ரோஜா பூ

ரோஜா பூக்கள் கொத்து கொத்தாக பூக்க ஒரு சிறிய டிப்ஸ்.

வேப்பக்கொட்டை புண்ணாக்கு ஒரு பங்கு மற்றும் வேர்க்கடலை புண்ணாக்கு முன்று பங்கு எடுத்து கொள்ளுங்கள். அதை ஒரு பாத்திரத்தில் நன்கு தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது 12மணி நேரம் முதல் 24 மணி நேரம் வரை நன்கு ஊர விடுங்கள்.

பின்பு அதை எடுத்து ஒரு பக்கெட் தண்ணீரில் இந்த கலவையை ஊற்றி செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் முன்பு இந்த கலவையை ஊற்றுங்கள். இதை ஊற்றும் முன்பு செடியில் உள்ள மண்ணை சற்று கிளறி விடுங்கள். இதை மாதத்திற்கு இரண்டு முறை செய்யலாம்.

பின்குறிப்பு

எப்போதும் ரோஜா செடிகளுக்கு நெறைய தண்ணீர் ஊற்ற கூடாது.

நன்றி

shree

மாடித்தோட்டத்திலும் வருமானம்

மாடி தோட்டத்தில் ஏராளமான காய்கறிகளை நாம் பயிரிடலாம் .அதை நீங்கள் சிறு வியாபார கண்ணோட்டத்திலும் அணுகலாம்.

மாடி தோட்டத்தில் கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா போன்ற செடிகள் எந்த விதமான மண்ணுக்கும் வளரும் அதை நீங்கள் அக்கம் பக்க வீட்டிலிருக்கும் சிறு வியாபாரத்திற்கு தரலாம். சிறு வியாபாரிகள் யாரேனும் தெரிந்தால் நல்ல விலைக்கு விற்று விடலாம். தக்காளி, வெண்டைக்காய் கத்தரிக்காய், மிளகாய், வெங்காயத்தாள் இஞ்சி, மஞ்சள், துளசி, தூதுவளை போன்ற காய்கறிகள் உங்களுக்கு நல்ல விளைச்சலையும் எந்த மண்ணிலும் வளரும். உங்கள் வியாபாரம் நல்ல லாபத்தை ஈட்டித் தரும்.

வெந்தய கீரை, மணத் தக்காளி, பூசணி பாகற்காய் போன்ற காய்கறிகள் செலவில்லாத வருமானத்தை தரும். நீங்க இயற்கை முறையில் விளைவிப்பதால் மக்கள் உங்கள் காய்கறிகளை வாங்க விரும்புவார்கள் சிறு முதலீட்டில் உங்களுக்குப் பெரும் லாபத்தை ஈட்டலாம்.

திரைக்கடல் ஸ்ரீ 

செவ்வாய், 28 ஜூலை, 2020

சைவ உரம்

மீன் அமிலத்துக்கு பதிலாக சைவ உரமும் உண்டு.

வாழைப்பழம் உரம்

வாழைப்பழம் ஒரு பத்து அல்ல பதினைந்து அத்துடன் நாட்டு சக்கரை.

வாழைப்பழத்தை தோள் உரிக்காமல் அப்படியே சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள்.

ஒரு மூடி கொண்டு டப்பா வை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இந்த நாட்டு சக்கரையை கலவையை போட்டுகொள்ளுங்கள்.

மூடியை கொண்டு மூடி விட்டு நன்கு குழுக்கி விடுங்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்த கலவையை மேழும், கீழுமாக குழுக்கி விடுங்கள். எந்த காரணத்திற்காகவும் மூடியை திறந்து விடாதீர்கள்.

மூன்று வாரங்கள் கழிந்து டப்பாவை திறந்துபார்த்தால் கழுகிய வாடை வீசாமல் பஞ்சாமிர்தம் போன்ற ஒரு மணம் வீசும்.

அதை வடிகட்டி ஒரு லிட்டர் தண்ணீரில் ஐம்பது மி. லீ இக்கலவையை கலந்து செடியின் மேல் தெளித்து விடுங்கள்.

உங்கள் செடி நன்கு வளரும். இரசாயன உரத்தை தவீர்போம். இயற்கை உரங்களை நாமே தயாரித்து நம் மண்ணை மலடு ஆகாமல் பாதுகாப்போம்.

நன்றியுடன்

திரைக்கடல் ஸ்ரீ

மீன் அமிலம்

மீன் அமிலம் நம் தோட்ட செடிகளுக்கு பயன்படுத்தினால் நன்கு விளைச்சலை தரும். அதை போன்ற ஒரு உரம் மண்ணுக்கு நம்மால் தர முடியாது.

செய்முறை

1.மீன் கழிவுங்கள் (மீன் கழுவிய தண்ணீர் அல்ல) மீன் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். மீன் கடையில் கேட்டால் இந்த கழிவுகளை தருவார்கள்.

2.நாட்டு சக்கரை அல்லது பனை வெல்லம் இரண்டிலும் எது வேண்டுமானாலும் நீங்கள் பயன் படுத்தி கொள்ளலலாம்.

ஒரு மிடியம் சைஸ் பிளாஸ்டிக் டப்பா வை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அந்த மீன் கழிவுகள் மற்றும் நாட்டு சக்கரையை போட்டு நன்கு குழுக்கி விடுங்கள்.மூடி கொண்டு மூடி அதை ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.

ஒரு மாதம் கழித்து அதை திறங்கள். எந்த வித துர்நாற்றமும் வீசாது.

அதை ஒரு லிட்டர் தண்ணீரில் 20மி.லீ கலவையை கலந்து மண்ணில் ஊற்றினாலும் தகும் அல்ல செடியின் இலையில் தெளித்து விடுங்கள்.

ரசாயன உரங்களை தவீர்போம். இயற்கை உரங்களை நாமே தயாரித்து நம் மண்ணை மலடு ஆகாமல் பாதுகாப்போம்.


சனி, 25 ஜூலை, 2020

கட்டணமில்லா கல்வி

வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு. ஐசிரி கணேஷ் அவர்கள் வெளியிட்ட காணொளியில், இக்கொரோனா காலத்தில் கட்டணமில்லா கல்வி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளர்.

ஐம்பதுக்கும் மேற்பட்ட பட்டப்படிப்புகளை முழுவதும் கட்டணமில்லா படிப்படியாக ஒவ்வொரு துறையிலும் நூறு மாணவ/மாணவியர்களுக்கு கொடுக்க முன் வந்துள்ளார்.

https://youtu.be/pEvlHS6qx1U

Shree

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...