பக்கங்கள்

சனி, 22 ஆகஸ்ட், 2020

அரசு கவின் கலைக் கல்லூரி

 தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்


கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் சென்னை, மதுரை, கோவை, திருவையாறு ஆகிய இடங்களில் நான்கு அரசு கவின் கலைக் கல்லூரிகளும், சென்னை மற்றும் கும்பகோணத்தில் அரசு கவின் கலை கல்லூரிகளும், மாமல்லபுரத்தில் அரசினர் கட்டட மற்றும் சிற்பக் கலைக் கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் 2020-2021 ஆண்டு மாணவ சேர்க்கைகான அறிவிப்புகளை ஏற்கனவே வெளியிடப்பட்டன.

இப்போது சென்னை, மதுரை, கோவை மற்றும் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு மற்றும் பட்டப்படிப்புக்கு, சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக்கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டட மற்றும் சிற்பக்கலை கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்புக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்டம்பர் 7 தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

மேலும் அரசு இசைக் கல்லூரிகளில் இசையாசிரியர் பயிற்சி மற்றும் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளும், சென்னை மற்றும் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பிற்குஇணைய தளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளும் பின்னர் அறிவிக்கப்படும்.

கூடுதல் விவரங்களை www.artandculture.tn.gov.in இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.


நன்றியுடன்

ஸ்ரீ

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2020

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி என்று படிக்க வேண்டிய பதிகம்

 சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் (05)

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் (10)

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன! (15)

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து (20)

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் (25)

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து (30)

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும் (35)

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக் (40)

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் (45)

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப் (50)

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து (55)

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில் (60)

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க் (65)

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் (70)

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே! (72)

ஓம் விக்ன விநாயகா போற்றி.

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

essay competition

 ஒரு கட்டுரை போட்டி https://innovate.mygov.in/essay-competition/

my gov india la school students gana essay competition 

INTRODUCTION

Ministry of Human Resource Development (MHRD), Government of India is glad to announce an essay competition for school students at the secondary and senior secondary stages (classes IX, X, XI and XII) on the theme 'Aatmanirbhar Bharat - Swatantra Bharat', which envisions the emergence of a robust and strong nation committed to the welfare of all. It is a clarion call by the Honorable Prime Minister of India Shri Narendra Modi for a strong, vibrant and self-reliant India for all and an India of all.

Aatmanirbhar and Swatantra Bharat campaign focuses on:

  • ensuring health and wellbeing for all;
  • achieving sustainable development with concerns of environment rooted in all initiatives;
  • optimizing resource mobilization and develop quality indicators to map interventions,
  • strengthening the efforts to bridge all forms of inequalities including social and economic divide for enabling each and every individual to enjoy the fruits of progress.
  • evolving multifarious approaches to address natural and human calamities with our own strength and reservoir of resources.
  • develop scientific and technical knowledge for innovating strategies to overcome barriers to development.

The present pandemic, COVID-19, as our Honorable Prime Minister reminds us, has once again brought to the forefront with our commitment to address challenges of life with thrust on our own capabilities and abilities.

As the theme – Aatmanirbhar Bharat- Swatantra Bharat rightly reiterates our commitment for working towards achieving self-reliance in all sectors of our economy rooted in our own pillars of culture, heritage and knowledge for becoming a global force to reckon with.

The themes designed in the essay will help students to explore their ideas for translating the concept of Aatmanirbhar, self-reliance into achievable one.


THEMES OF THE ESSAY COMPETITION

  1. Aatmanirbhar Bharat: Indian Constitution and Democracy are the biggest enablers
  2. India at 75: A Nation Marching towards Aatmanirbhar Bharat
  3. Aatmanirbhar Bharat through Ek Bharat Shrestha Bharat: Innovation thrives when there is Unity in Diversity
  4. Digital India for Aatmanirbhar Bharat: Opportunities on COVID-19 and Beyond
  5. Aatmanirbhar Bharat - How can school children contribute to National Development?
  6. Aatmanirbhar Bharat: Overcoming Gender, Caste and Ethnic biases
  7. Aatmanirbhar Bharat: Making of a New India through Bio-diversity and Agricultural Prosperity
  8. While I exercise my rights, I must not forget to undertake my duties to usher in an Aatmanirbhar Bharat
  9. My physical fitness is my wealth that will build the Human Capital for Aatmanirbhar Bharat
  10. Conserve Blue to Go Green for an Aatmanirbhar Bharat.
 
intha topic la essay eluthanum last date 23 aug 2020

only for 9 to 12 students.

thanks 
 
for more information vist this website 

வியாழன், 20 ஆகஸ்ட், 2020

மாரடைப்பு -1

மாரடைப்பு

மாரடைப்பை இன்று ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப் பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும். உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

முதல் 2 மணி நேரம் "கோல்டன் அவர்' என்று அழைக்கப்படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

மாரடைப்பின் வகைகள்

முதல் வகை மாரடைப்பு

முதல் வகை, மாரடைப்பு ரத்த நாளத்தில் கெட்ட கொழுப்பினால் அடைப்பு ஏற்பட்டு, இறுதி கட்டத்தில் ரத்தம் உறைந்து முழு அடைப்பு ஏற்படுவது. இதனால், இ.சி.ஜி.,யில் மாற்றம் ஏற்படுகிறது. இதை ஸ்டெமி மாரடைப்பு என்று அழைக்கின்றனர். இதை உறுதி செய்ய டிரோப்டி டெஸ்ட், செய்ய வேண்டும். அருகில் உள்ள மூன்றாம் நிலை மருத்துவமனையாக இருந்தாலும், 2 மணி நேரத்திற்குள் ஆஞ்சியோ கிராம், பிளாஸ்டி ஸ்டென்ட், பைபாஸ் செய்ய வேண்டும். மாரடைப்புக் காரணமான ரத்தக் கட்டியை கரைக்க பல்வேறு ஊசிகளை போடுவதுண்டு. கட்டியை கரைத்தவுடன் மீதியுள்ள அடைப்பை பலூன் ஸ்டென்ட் வைத்து குணப்படுத்த வேண்டும்.

இரண்டாவது வகை

இந்த இரண்டாவது வகை மாரடைப்புக்கு காரணம் வேறு விதமானது. இதயத் தசைகளுக்கு பிராண வாயுத் தேவை. அதற்கு ஈடு கொடுத்து சமமாக பிராண வாயுவை கொடுக்க வேண்டிய சமநிலையில் வேறுப்பட்டால், குறை ஏற்பட்டு முழு அளவு தடைப்பட்டால் மாரடைப்பு மரணம் ஏற்படும். ரத்தம் தடைப்பட்டால் ரத்தம் உறைந்து விடும். இந்த வகை மாரடைப்பு மரணம், இளம் வயதினருக்கும் வரும். ஆஞ்சியோ கிராம் செய்து பார்த்தால், கரோனரி ரத்தக்குழாய்கள் அடைப்பு இன்றி இருக்கும். நடுத்தர இளம் பெண்களுக்கு சாதாரணமாக வரும்.

மூன்றாவது வகை

நீண்ட நேரம் ரத்த நாளம் சுருங்கினால், ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்பட்டு அதன் மூலம் மாரடைப்பு உண்டாவது தான் இந்த வகை.

நான்காவது வகை

மாரடைப்பு வந்த பின், பலூன் ஸ்டென்ட் சிகிச்சை செய்யும் போது ஸ்டென்டில் ரத்தம் உறைந்து அடைப்பு ஏற்படும். இது, இன்ஸ்டென்ட் அடைப்பு எனப்படும். அதனால் வரும் மாரடைப்பு மூலம், விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல மருந்துகளால், இதை உடனடியாக தடுத்துவிடலாம்.

ஐந்தாவது வகை

ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அதைச் சரிப்படுத்தி, ரத்த ஓட்டத்தைச் சீராக்க உருவாக்கப்பட்டதுதான் ஸ்டென்ட். இது உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பைக் கொண்டது.

ரத்தக் குழாய் வழியே சிறிய கம்பி போன்ற கருவியைச் செலுத்தி, இதயத்தில் ஏற்படும் அடைப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் ‘இன்டர்வென்ஷனல் கார்டியாலஜி’ துறையில், கரையக்கூடிய (Bioabsorbable Stent) ஸ்டென்ட்களின் வருகை ஒரு புதிய புரட்சி. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் இந்த ஸ்டென்டைப் பயன்படுத்தி அறுவைசிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது.

‘இதயத் திசுக்களுக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது, மாரடைப்பு வருகிறது. ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவது, ரத்தம் உறைவது உள்ளிட்ட காரணங்களால் ரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.

இந்த ரத்தக் குழாய்களைச் சரிசெய்யும் வகையில், 1977-ல் பலூன் ஆஞ்ஜியோபிளாஸ்டி முறை வந்தது. இந்த சிகிச்சையின்போது, தொடையில் உள்ள ரத்த நாளத்தில் சிறிய துளையிட்டு அதன் வழியே கம்பி போன்ற கருவி ஒன்றை அனுப்பி, அடைப்பு உள்ள இடத்தில் பலூன் போன்ற அமைப்பு ஒன்றை வீங்கச் செய்து அடைப்பு சரிசெய்யப்பட்டது. 1988-ம் ஆண்டில், இதயத் திசுக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத உலோகத்தால் ஆன வலை போன்ற அமைப்பை உள்ளே செலுத்தி, குறிப்பிட்ட இடத்தை பலூன் துணையுடன் விரிவாக்கும் தொழில்நுட்பம் அறிமுகம் ஆனது. வலை அமைப்பு விரிவாக்கப்பட்டதும் பலூன் சிறிதாக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்டுவிடும். இதனால், ரத்தம் செல்வதில் இருந்த தடை சரிசெய்யப்படும். இந்த உலோகத்தில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே வந்தன. இதன் அடுத்தக் கட்டமாக, 2002ம் ஆண்டில், மருந்து தடவப்பட்ட ஸ்டென்ட் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தில் மீண்டும் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்பட்டது தற்போது முதன்முறையாக உலோக ஸ்டென்ட்டுக்கு மாற்றாக, இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும் ஸ்கேஃபோல்டு என்கிற புதிய ஸ்டென்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

பொதுவாக உலோக ஸ்டென்ட் என்பது கூண்டு போன்ற நிரந்தர அமைப்பு. நம்முடைய இதயத்தில் அது எப்போதும் இருக்கும். இந்த ஸ்டென்ட்டைப் பயன்படுத்தும்போது, அந்த இடத்தில் ரத்தம் உறைய வாய்ப்பு உள்ளது. இதனால் ரத்தம் கட்டியாவதைத் தடுக்க, பல ஆண்டுகளுக்கு மாத்திரை எடுத்துக்கொள்ளப் பரிந்துரைப்போம். புதிய கரையக்கூடிய இதய ஸ்டென்ட் தற்காலிகமானது. ரத்தக் குழாய் தன்னுடைய இயல்பு நிலைக்குத் திரும்பும் வரையில்தான் இது இருக்கும். இதன் பிறகு 12 முதல் 24 மாதங்களில் இந்த ஸ்டென்ட் இதயத் திசுவோடு திசுவாகக் கலந்துவிடும். இதனால், இந்த புதிய ஸ்டென்ட் பயன்படுத்துவதன் மூலம் 6 மாதங்களிலேயே மாத்திரை எடுத்துக்கொள்ளும் அளவைக் குறைத்துவிடலாம்.

ரத்தக் குழாயானது சுருங்கி விரியும் தன்மைகொண்டது. அப்படி சுருங்கி விரியும்போதுதான் அது ஆரோக்கியமாக இருக்கும். பழைய ஸ்டென்ட் நிரந்தர அமைப்பு என்பதால், ரத்தக் குழாயின் தன்மை பாதிக்கப்பட்டது. ஆனால், புதிய ஸ்டென்ட் ரத்தக் குழாயின் இயற்கையானத் தன்மையைப் பாதுகாக்கிறது. மேலும், எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளிக்க முடியும் என்பது இந்த ஸ்டென்ட்டின் மற்றொரு சிறப்பம்சம்”

ஸ்டென்ட் சிகிச்சைக்கு பிறகு அந்த ஸ்டென்ட் என்ன வகை எப்படிப்பட்டது போன்ற முக்கிய குறிப்புகளை நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி தெரிந்து கொண்டு, கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வர வேண்டும். அதாவது ஸ்டென்டைப் பற்றி நல்ல தெளிவாகதெரிந்த ஊருடுவல் நிபுணரிடம் ஆலோசனைப் பெற்று, ஸ்டென்டின் இன்றைய நிலை, கொழுப்பு படிந்துள்ள நிலையின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்டென்ட் முழுவதும் மூடினால் மாரடைப்பு, மூச்சு இரைப்பு, படபடப்பு, இனம் தெரியாத அசதி, இது வராமல் தடுக்க பல கட்டங்களில் பரிசோதனைகள் செய்துக் கொள்ள வேண்டும்.

ஆறாவது வகை - பைபாஸ் சர்ஜரி

பைபாஸ் சர்ஜரி என்பது இதய ரத்தக்குழாய் முழுவதும் அடைபடுவதால் உண்டாகக்கூடிய மாரடைப்பு நோய்க்கு செய்யக்கூடிய இதய ஆபரேஷன். இந்த ஆபரேஷனை திறந்த முறை இதய ஆபரேஷன் மூலம், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகப்படுத்தி இதய துடிப்பை நிறுத்தியும் ஆபரேஷன் செய்யலாம். இதயத்துடிப்பை நிறுத்தாமலும், செயற்கை இதயம் மற்றும் நுரையீரல் மிஷின்களை உபயோகிக்காமலும் ஆபரேஷன் செய்யலாம்.

பைபாஸ் சர்ஜரி செய்வதற்கு காலில் உள்ள அசுத்த ரத்தத்தை இதயத்திற்கு கொண்டு செல்லும் செபனஸ் ரத்தக்குழாய் மற்றும் மார்புக்கூட்டின் உட்புறமுள்ள இடது மற்றும் வலது உள்மார்பு ரத்தக்குழாய்கள் மற்றும் முன் கையில் உள்ள ரேடியல் ரத்தக்குழாய்கள் போன்றவற்றை உபயோகித்து மேற்கூறிய ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரத்தக்குழாய்களின் அடைப்பின் தன்மையைப் பொறுத்து மகாதமனியின் ஆரம்பத்திலும், இதய ரத்தக் குழாய் அடைப்பின் கீழும் இணைத்து பைபாஸ் சர்ஜரி செய்யப்படுகிறது.

பைபாஸ் சர்ஜரி என்பது ஓபன் ஹார்ட் சர்ஜரியின் மூலமும் செய்யக்கூடிய ஒரு தனிப்பட்ட இதய அறுவைச் சிகிச்சை முறை. பொதுவாக பொதுமக்களுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரியும், பைபாஸ் சர்ஜரியும் ஒன்று என்ற குழப்பத்திற்கு மேற்கூறிய விளக்கம் பொருத்தமானதாக இருக்கும்.

மாரடைப்புக்கு பின், பைபாஸ் சர்ஜரி செய்தவர்களுக்கு வரும் மாரடைப்பு இங்கு பைபாஸ் செய்த பல கிராப்டுகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும். பைபாஸ் செய்தவர்கள் நமக்கு பைபாஸ் கிராப்டுகள் வைக்கப்பட்டுள்ளது. இது ரத்தநாளம் போன்ற ரத்த ஓட்டமில்லை. கிராப்ட் வெறும் இணைப்பு தான். ஆகையால் இதை அதி ஜாக்கிரதையாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

எத்தனை கிராப்ட்கள் எந்தெந்த இடங்களில் உள்ளது போன்றவற்றை வைத்து கண்காணிக்க வேண்டும். இதற்கு தேவையான பல பரிசோதனை கிராம்களை செய்து டி.எட்.டி., எக்கேகாடியோ கிராம் செக் ஆஞ்சியோ கிராம் செய்ய வேண்டும். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், கொழுப்புகளை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இவர்கள் தனது இதயம் பைபாசால் 100 சதவீதம் நலமாக உள்ளது என்று எண்ணாமல், கிராப்ட்களை கண்காணிக்க வேண்டும்.


செய்ய வேண்டியவை

ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், அதிக கெட்டக் கொழுப்புகள் உள்ளவர்களும், ரத்தக்குழாய் அடைப்புள்ளவர்களும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து ஸ்டென்ட் வைத்துள்ளவர்களும், பைபாஸ் கிராப்ட் வைத்துள்ளவர்களும் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

தனி மனித ஒழுக்கம், மது, பல மனைவிகள், புகை பிடித்தல் இல்லாமல் இயற்கை உணவு வகையிலும் ஒழுக்க நெறியோடும் உடற்பயிற்சி, யோகாவும், இதய ஊடுருவல் வல்லுனர் ஆலோசனையின்படி இதயத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அறிகுறிகள்

  • மார்பின் மையப்பகுதியில் வலி ஆரம்பமாகும் அல்லது, இடது பக்கம் வலி ஏற்படும். அந்த வலி, இடது கையில் பரவலாம்.
  • வயிற்றின் மேல் பகுதியில் ஒரு வித எரிச்சல் இருக்கும். இதைத்தான் பலரும், காஸ் டிரபிள் என்று நினைத்து , டைஜின் போட்டு ஏமாந்து விடுகின்றனர்.
  • திடீரென மூச்சுத்திணறல் ஏற்படும். புழுக்கம் தெரியும்.
  • உடலில் வியர்வை பெருக்கெடுக்கும். அதுவும் குளிர்ந்த வியர்வையாக இருக்கும்.

தவிர்க்கும் முறைகள்

  • சிகரெட் பிடிப்பதை விட வேண்டும்.
  • உடல் எடையை அதிகரிக்க விடக்கூடாது.
  • சர்க்கரை , ரத்த அழுத்தம் மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • கொழுப்பு, பால், கிரீம், அசைவ உணவை கைவிட வேண்டும்.

டென்ஷன் இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்; யோகா, தியானம் செய்தால் எந்த டென்ஷனும் போய்விடும். தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்தல் மிகவும் நல்லது. கலோரி குறைந்து, உடல் ஒபிசிட்டி இல்லாமல் "ஸ்லிம்'மாக இருக்கும்.

ஒருவருக்கு குருதிக் குழாய் அடைப்பு காரணமாக தலை சுற்றல், நினைவிழப்பு ஆகியவை ஏற்படும் நிலையில், உறவினர்கள் காலதாமதம் ஏதுமின்றி 3 மணி நேரத்துக்குள் சிகிச்சை வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வாறு செய்தால் பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப உடனடியாக மருத்துவ சிகிச்சை அல்லது புதிய சிகிச்சை அளித்து நோயாளிக்கு பக்கவாதம் அல்லது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.



நன்றியுடன்

ஸ்ரீ



புதன், 19 ஆகஸ்ட், 2020

வடு எஸ். ரா

 வடு சிறுகதை எஸ். ரா எழுதியது. 


ஒரு சிறுவனின் தாழ்வு மனப்பான்மையின் மனகண்ணாடியாக நான் இந்த சிறுகதையை பார்கிறேன். 

ஒரு மைதானத்தில் விளையாடுறான் அங்க உள்ள சமவயது சிறுவர்கள் அவனை கேலி செய்றாங்க. நீ நாளைக்கு ஸ்கூல்க்கு வரும் போது பெண்ணா மாறிடுவ னு. அதையும் உண்மை னு நம்புற ஓர் அறியா சிறுவன். 

காலை ல தான் பெண்ணா மாறுவேன். தூங்காம இருந்தா மாற மாட்டேன் னு இரவு தூங்காம இருங்க முயற்சி பண்ணறான். ஆனா அம்மா சமையல் வாசனை தாங்க முடியல 

எப்படி அவன் அந்த சூழலை புரிஞ்சுகுறான் னு தான் இந்த சிறுகதை அழகா சிறுகதையை எழுத்தி இருக்கார் எழுத்தாளர். 

என்னை கவர்ந்த வரி:. 

உடம்பில் பதியாத அந்த வடுவோடு ஒருபோதும் உரு மாற முடியாதபையன் நான். 

நன்றி 

திரைக்கடல் 

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2020

GATE

 ஒரு முதுகலை மாணவியாக இந்த பதிவை பதிவிடுகிறேன்.


பொறியியல் மாணாக்கர்கள் எக்காரணத்தைக் கொண்டும் கேட் தேர்வை தவர விடாதீர்கள். அனைத்து பொறியியல் மாணவர்களும் எழுதுங்கள். பாஸ், பெயில் என்பது முக்கியம் அல்ல. நீங்கள் அத்தேர்வை எழுதியுள்ளீர்கள் என்பதே உங்கள் ஒரு பிளஸ் தான்.

எம். இ படிப்பதற்கான நுழையவு தேர்வு மட்டுமல்ல கேட் தேர்வு. இத்தேர்வின் மதிப்பெண் இன்டர்வியூ ல் கூடுதல் மதிப்பெண்களை பெற்று தரும்.


மத்தியரசின் எந்த ஒரு பொறியாளர் பதிவுக்கும் இம்மதிப்பெண் அவசியம்.

நெகட்டிவ் மற்றும் பூஜ்ஜியம் மதிப்பெண் மட்டும் எடுக்க கூடாது.

நீங்கள் எத்தனை மதிப்பெண் எடுத்தாலும் மறுமுறை கேட் தேர்வு எழுதினால் அம்மதிப்பெண்ணும் கணக்கில் எடுக்கப்படும்.
 உதாரணம் :நான் 2020 ஆம் ஆண்டு கேட்டில்  2மார்க் எடுத்து, 2021ல் - 2 மார்க் எடுத்து இருந்தால் என்னுடைய மார்க் சீட்டில் 0 என்று மதிப்பெண் வரும்.

இத்தேர்வை கொண்டு நீங்கள் எம் . இ, பி. எச். டி சேர்ந்தால் ஊக்க தொகை வழங்கப்படும்.

நீங்கள் JRF, SRF பணிகளில் சேர்ந்தால் கேட் மதிப்பெண் அடிப்படையில் தான் ஊதியம்

வித் கேட் JRF :31,000+HRD

வித்ஆவுட் கேட் 25,000+HRD
(HRD ஒவ்வொரு நிறுவனத்திற்கும் வேறுபடும்)


நமது இலக்கு +VE மார்க் தகும். உங்கள் பிரிவின் மதிப்பெண்ணை பெற்றுவிட்டால் கண்டிபாக அதீத சலுகைகள் உடன் உங்களுக்கு வேலை உறுதி. 

என்னை பொருத்தமட்டில் முதலாமாண்டு முதலே பயிர்ச்சியை தொடங்குகள். கோட்சிங் சென்று படித்தால் அவர்கள் டிரிக்ஸ்  அண்ட் டைம் management சொல்லி தருவார்கள். நீங்கள் தான் கான்சப்டை புரிந்து கொள்ள வேண்டும். எனவே எக்காரணத்தை கொண்டும் பொறியியல் புத்தகத்தை எடைக்கு போடாதீர்கள்.சுய குறிப்பு எடுங்கள். 

அல் த பெஸ்ட்.
 

shree M.E

பிளஸ்-2 முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் எப்படி சேர முடியும்?

 இவ்வினாவை எழுப்பியவர்க்கு என்னுடைய கேள்வி ஏன் எந்த மாணவர்களும் இவர்களுக்கு எதில் ஆர்வமுள்ளது, நமது திறமையின் அடிப்படையில் உயர் கல்வியை தேர்ந்தெடுப்போம் என்ற ஏன் யாரும் சிந்திப்பதில்ல. முதலில் உங்களின் திறமையையும், ஆர்வத்தில் அடிப்படையில் உயர் கல்வியை தேர்வு செய்யுங்கள் என்பது எனது ஆலோசனை.

சரி கேள்விக்கு வருவோம். ஒரு அறிவியல் மாணவி அதவாது (இயற்பியல், வேதியல், விலங்கியல், தாவரவியல்) படித்த மாணவி எப்படி பி. காம், சி. ஏ படிக்க முடியும். 🤔🤔🤔🤔🤔.

உங்கள் துறை படிப்புகளே நிறைய உள்ளது.

பி. எஸ்சி இயற்பியல் படித்தால் isro வில் சேரலாம்.

பி. எஸ்சி எலக்ட்ரானிக்ஸ் படித்தால் பி. இ இசிஇ மாணவர்களுக்கு இணையான வேலை கிடைக்கும்.

பி. எஸ்சி aeronautical இதை படித்தால் எங்கோ சென்று விடுவீர்கள்.

இது எல்லாம் எனது பரிந்துரைகள்.

உங்களின் கேள்விக்கான பதில் நீங்கள் ஒரே நேரத்தில் பி. காம் சி. ஏ படிக்க முடியாது.

12ம் வகுப்பு பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவைச் சாந்த மாணவர்களும் சி.ஏ மற்றும் சி.எஸ் படிப்புகளில் சேர்ந்து பயிலலாம் . பிளஸ் 2வில் அக்கோடன்சி குரூப் மாணவர்கள் மட்டுமல்லாது அறிவியல் மாணவர்களும் ஆடிட்டர் மற்றும் கம்பெனி செக்ரட்டரி ஆகலாம் . ஆடிட்டிங் துறையில் வேலைவாய்ப்புகளை பெற, சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பில் ஒன்றை கட்டாயம் படிக்க வேண்டும்.சி.ஏ., படிப்பில் சேர பிளஸ்-2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் நேரடியாக சேரலாம்.

பிளஸ்-2 முடித்தவர்கள் சி.ஏ., படிப்பில் எப்படி சேர முடியும்?

பலரும் கருதுவதுபோல் பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவு முடித்தவர்கள்தான் சி.ஏ., படிப்பில் சேர முடியும் என்பது இல்லை.

எந்தப் பாடப்பிரிவை எடுத்துப் படித்தவர்களும் சி.ஏ. படிக்கலாம். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கு முன்பாக, ‘சி.ஏ. பவுண்டேஷன்’ படிப்பில் சேர வேண்டும். படிப்புக்காலம் ஓராண்டு ஆகும். நான்கு தாள்கள் கொண்டது

சி.ஏ., - ஐ.சி.டபிள்யூ.ஏ., மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் போன்ற படிப்புகள் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின்படி நடத்தப்படுகின்றன. இந்த படிப்புகளை தொலைநிலையில் மட்டுமே படிக்க முடியும். ஆடிட்டிங் துறைக்கு கடினமான பயிற்சி அவசியம். பயிற்சி எடுத்தால், தேர்வில் எளிதாக வெற்றி பெறலாம்.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர்வதற்கான வழிமுறைகள் என்ன?

பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு சி.ஏ. படிப்புக்காலம் என்பது 4 ஆண்டுகளைக் கொண்டதாகும். பி.காம்., பி.பி.ஏ., பி.பி.எம்., போன்ற வணிகவியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் சி.ஏ. பவுண்டேஷன் பாடப்பிரிவில் சேராமலேயே, நேரடியாக சி.ஏ. இன்டர்மீடியேட் பாடப்பிரிவில் சேர்ந்து படிக்கலாம். இது ஓராண்டு படிப்பு ஆகும்.

இதில் குரூப்-1, குரூப்-2 என இரு பிரிவுகள் உள்¢ளன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 பாடங்கள் உள்ளன. இவற்றில் ஏதாவது ஒரு குரூப்பில் உள்ள பாடங்களில் தேர்ச்சி பெற்றாலே, அடுத்து நேரடியாக யாராவது ஒரு ஆடிட்டரிடம் மூன்று ஆண்டுகள் நேரடிப் பயிற்சிக்குச் சேர்ந்து பயில்வது கட்டாயம்.

பயிற்சிக்காலத்தில் அவருக்கு மாதம் ரூ.1000 முதல் ரூ.3000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

அங்கு இரண்டரை ஆண்டுகள் பயிற்சியை நிறைவு செய்த பின்னர் சி.ஏ. ஃபைனல் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். சி.ஏ. ஃபைனலிலும் குரூப்-1, குரூப்-2 என இரண்டு பிரிவுகள் உள்ளன. இதில் தேர்ச்சி பெற்ற பிறகு ஆடிட்டராக முறையாக பதிவு செய்து கொள்ளலாம்.

வணிகவியல் சாராத பட்டப்படிப்பை முடித்தவர்கள் சி.ஏ. படிப்பில் சேர முடியாதா?

அப்படி எல்லாம் ஒன்றுமில்லை. எந்த ஒரு பட்டப்படிப்பை முடித்தவரும் சி.ஏ. படிப்பில் சேரலாம். பி.காம்., போன்ற வணிகவியல் படிப்பை முடித்தவர்களுக்கு, சி.ஏ. படிப்பது கொஞ்சம் எளிமையாக இருக்கும். அவ்வளவுதான் வித்தியாசம். யாராக இருந்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 10 மணி நேரங்களாவது சி.ஏ. படிப்பிற்கு நேரம் ஒதுக்குவது அவசியம்.

பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.காம்., போன்ற வணிகவியல் பிரிவை முடித்தவர்கள் 55 விழுக்காடும், வணிகவியல் சாராத இதர பட்டப்படிப்பு முடித்தவர்கள் 60 விழுக்காடு மதிப்பெண்களுடனும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கும் குறைவான மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள், சி.ஏ., படிக்க வேண்டுமெனில் அவர்கள் பிளஸ்-2 மாணவர்களைப்போல் சி.ஏ., ஃபவுண்டேஷன் பாடப்பிரிவு மூலமாகத்தான் உள்ளே நுழைய முடியும்.

பிளஸ்-2வில் வணிகவியல் பாடப்பிரிவை எடுத்த மாணவர்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பில் பி.காம்., பி.பி.எம்., பி.பி.ஏ., அல்லது பி.ஏ., பொருளாதாரம், கூட்டுறவு, வரலாறு இப்படி தெரிவு செய்வதிலேயே கவனம் செலுத்துகின்றனர் இன் பதில் வைபவ் லக்ஷ்மி ·

தொழில் நிறுவன படிப்புகள்

அதேபோல, பி.காம்., ஹானர்ஸ் உடன் ஒரே ஆண்டில், சி.ஏ. ஐ.சி.டபிள்யூ.ஏ மற்றும் கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்புகளை படிக்கவும் வாய்ப்பு உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பாடத்திட்டத்தில் மாற்றம் வர வேண்டும். மாணவர்கள் வெறும் பாட புத்தகத்தை படிக்காமல், தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களுக்கு என்ன தேவையோ, அதை படித்தால் மட்டுமே வேலை கிடைக்கும்.

,குருநானக் கல்லுரியில் பி.காம் (B.Com) சேரலாமா? சேரலாம்..ஆனால் கல்லூரியில் shift 1,shift 2 என்று இரண்டு விதமான நேரங்களில் பி.காம் படிப்புகள் உள்ளது.

shift 2 ல்

  1. department of b.com (general) 
  2. department of b.com (corporate secretryship ) 
  3. department of b.com (Honours) 
  4. department of b.com (information system management ) 

department of b.com (banking management)

என்று இத்தனை பிரிவுகள் உள்ளது .இதில் எதில் சேர்வது என்பது உங்களின் விருப்பம்.

திரைக்கடல்

நன்றியுடன்

வருங்கால பேராசிரியர் shree

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

பேசும் கண்கள்

 

1.கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
2) கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
3). கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
4). கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.
5). கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,
ஆசைப்படுகிறது.
6). கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7). கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
8). கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
9). கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10). கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
11). கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.
12). கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13). கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.
14). கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
15). கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
16). கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.
17). கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.
18). கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.
19). கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது.
20). கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
21). கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.
22). கண்களை கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.
23). கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24). கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25). கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.
26). கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27). கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.
28). ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை.
29). இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.
30). கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம்.
# படித்ததில் ரசித்தது #

அமோனியம் நைட்ரேட்

 வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். இது அம்மோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் அமோனியம் நைட்ரேட் உருவாக்கப்படுகிறது.

அமோனியம் நைட்ரேட் என்றால் என்ன?
  1. அமோனியம் நைட்ரேட் உரங்கள் தயாரிக்கவே அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது.  மிகவும் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய அமில பொருள் என இது கூறப்படுகிறது.  
  2. வேதியியல் பெயரில் NH4NO3 என்று அழைக்கப்படும் அம்மோனியம் நைட்ரேட் இயற்கையாக கிடைக்கக் கூடியதாகும். 
  3. இது அம்மோனியம் நேர்மின் அயனின் நைட்ரேட் உப்பாகி ஒரு வேதி சேர்மத்தில் உருவாகிறது. 
  4. இது நீரில் எளிதில் கரையக் கூடிய தன்மைக் கொண்டுள்ளது.பல்வேறு பயன்பாடுகளுக்காக செயற்கையாகவும் அமோனியம் நைட்ரேட் உருவாக்கப்படுகிறது.

வெடிக்க காரணம் 

  1. பயிர்கள் செழித்து வளர அமோனியம் நைட்ரேட் உரப்பொருளாக பயன்படுத்தப்படும் அதேவேளையில் பாறைகளை உடைக்கவும் பயன்படுத்தப்படுகிறது. 
  2. எந்தவொரு எரிபொருளும் வெடிக்க குறிப்பிட்ட சில காரணங்கள் தேவை. அதே விதிதான் அமோனியம் நைட்ரேட்டுக்கும் பொருந்தும். அமோனியம் நைட்ரேட் மிகவும் ஆற்றல் கொண்டது. இது அதிக அளவு வெப்பத்தை வெளியிடுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் அம்மோனியம் நைட்ரேட் இருந்தால் அது தீப்பிழம்பு போன்று வெளிப்புற வினைகள் பயன்படாமல் நெருப்பை வெளியிடுகிறது.
அமோனியம் நைட்ரேட்டில் இருந்து  ஆக்ஸிஜன் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், கொழுந்து விட்டு எரிவதற்கு வசதியாக உள்ளது.  பயங்கரவாதிகளும் தங்கள் தாக்குதல்களுக்கு  அமோனியம் நைட்ரேட்டை பயன்படுத்தும் போக்கு தற்போது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.


இதற்கு முன்பு நடந்த அமோனியம் நைட்ரேட் விபத்து

1921 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 500 பேர் பலியாகினர்.

அமெரிக்காவில் 1947 ஆம் ஆண்டு டெக்ஸாஸ் மாகணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் அமோனியம் நைட்ரேட் வெடித்தது. இதில் 581 பேர் பலியாகினர்.

கடந்த 2015- ஆம் ஆண்டு சீனாவின் தியான்ஜின் நகரில்  நடைபெற்ற விபத்தில் அமோனியம் நைட்ரேட்  உள்பட வேதிப்பொருள் வெடித்தது. இதில் 173 பேர் பலியாகினர்.

வியாழன், 6 ஆகஸ்ட், 2020

அயோத்தி ராமர் கோயில் 500 ஆண்டுகால வரலாறு

 

அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா: 500 ஆண்டுகால வரலாறு

அயோத்தி

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் ஆகஸ்டு 5ஆம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், இந்த சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக கடந்த 500 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

1528: மசூதியில் காணப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் அரசு ஆவணங்களின்படி பார்த்தால், 1528 - 1530 காலக்கட்டத்தில் அயோத்தியில் ராம் கோட் மொகல்லாவில் மலைக்குன்றில் முகலாய சக்ரவர்த்தி பாபரின் உத்தரவின் பேரில் அவருடைய ஆளுநர் மீர் பாகி என்பவரால் இந்த மசூதி கட்டப்படுகிறது.

1853: இந்த இடத்தில் முதல் முறையாக மதக் கலவரம் ஏற்படுகிறது.

அயோத்தி

1859: இந்த பிரச்சனையில் தலையிட்ட பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்கள் மசூதியின் உள் மண்டபத்தை முஸ்லிம்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தவும், வெளி மண்டபத்தில் இந்துக்கள் வழிபாடு செய்யவும் வழிவகை செய்தனர். இதை அமல்படுத்தும் வகையில் அங்கே அவர்கள் வேலியை அமைத்தனர்.

1949: ராமர் சிலைகள் மசூதிக்குள் கொண்டுவந்து வைக்கப்படுகின்றன. இதை இந்துக்கள் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதை முஸ்லிம்கள் எதிர்த்தனர். இதையடுத்து இரு தரப்பும் சிவில் வழக்கை நீதிமன்றத்தில் தொடுக்கின்றனர். இவ்விடயத்தில் தலையிட்ட இந்திய அரசு சம்மந்தப்பட்ட இடத்தை சர்ச்சைக்குரிய இடமாக அறிவித்து அந்த இடத்தின் கதவுகளை மூடுகிறது.

1984: இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போதே விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் இந்த இடத்தை விடுவித்து அங்கு ராமருக்கு கோயிலை கட்டப் போவதாக அறிவித்தது. பாரதிய ஜனதா கட்சியின் அப்போதைய தலைவரான எல்.கே. அத்வானி ராமர் கோயில் கட்டுவதற்காக நாடு தழுவிய பிரசாரத்தை மேற்கொண்டார்.

1986: மாவட்ட நீதிபதி சர்சைக்குரிய கட்டிடத்தின் பூட்டுக்கள் திறக்கப்பட வேண்டும் என்றும் அங்கு இந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதற்கு எதிர்வினையாக முஸ்லிம்கள் பாப்ரி மசூதி நடவடிக்கை குழுவை ஆரம்பித்தனர்.

அயோத்தி

1989: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு, சர்ச்சைக்குரிய மசூதிக்கு அடுத்த பகுதியில் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டியது.

1990: விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் மசூதியின் சில பகுதிகளை நாசம் செய்தனர். இதன் பிறகு அப்போதைய பிரதமர் சந்திரசேகர் இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் செய்ய மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

1991: அயோத்தி அமைந்துள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாரதிய ஐனதா கட்சி ஆட்சியைப் பிடிக்கிறது.

1992: பாரதிய ஜனதா, விஸ்வ இந்து பரிஷத், சிவசேனா உள்ளிட்ட அமைப்புகளின் தொண்டர்களால் மசூதி இடித்துத் தள்ளப்படுகிறது. இதையொட்டி நடைபெற்ற மத மோதல்களின் காரணமாக சுமார் இரண்டாயிரம் பேர் உயிரிழக்கின்றனர்.

1998: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சியைப் பிடித்த நிலையில், மீண்டும் ராமர் கோயில் பிரச்சனையை விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு கையிலெடுக்கிறது. அன்றைய பிரதமர் வாஜ்பேயி, நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா தலைமையில் அயோத்யா பிரிவை ஆரம்பிக்கிறார்.

2002: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான தேர்தல் நடக்கும் போது, அயோத்தியில் கோயில் கட்டுவது குறித்து உறுதியான உத்திரவாதங்களை அளிக்க பாரதிய ஜனதா கட்சி மறுக்கிறது.

அயோத்தி

2003: இந்த வழக்கில் முதன்மை மனுதாரர்களில் ஒருவரான ராமச்சந்திர பரமஹம்ஸ் என்பவரின் மரணச் சடங்குகளில் கலந்து கொண்டு பேசிய அப்போதைய பிரதமர் வாஜ்பேயி அயோத்தியில் கோயில் கட்டப்படும் என்கிறார். நீதிமன்ற உத்தரவு மூலமாகவோ, அல்லது பேச்சுவார்த்தை மூலமாகவோ இதற்கு தீர்வு கிடைக்கும் என்றும் வாஜ்பேயி நம்பிக்கை வெளியிட்டார். மசூதி இடிக்கப்பட்டு 11 ஆண்டுகள் கடந்த நிலையில் அதற்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. இருந்தும் அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி மீது வழக்கு ஏதும் பதிவுசெய்யப்படவில்லை.

2005: சர்ச்சைக்குரிய இடத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் தாக்குகின்றனர். பாதுகாப்புப் படையினர் திரும்ப தாக்கியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.

2009: பாபர் மசூதி இடிப்பு தொடர்பான லிபர்ஹான் கமிஷனின் அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படுகிறது. மசூதி உடைக்கப்பட்டதற்காக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் மீது அது குற்றஞ்சாட்டுகிறது.

2010: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லாவுக்கும் (குழந்தை வடிவில் ராமர் கடவுள்), இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா எனும் துறவிகள் குழுவின் அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

2019: இந்திய உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு ஒரு மனதாக அயோத்தி பிரச்சனையில் தீர்ப்பு வழங்கினர். இத்தீர்ப்பு அடிப்படையில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் இந்திய அரசு ராமர் கோயிலை நிறுவ மூன்று மாதங்களுக்குள் ஒரு அறக்கட்டளையை நிறுவவும், இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த அயோத்தியில் வேறு இடத்தில் ஐந்து ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...