பக்கங்கள்

திங்கள், 12 அக்டோபர், 2020

டிஎன்பிசி கேள்விகள்-1

 டிஎன்பிசி கேள்விகள்-1

1.ஆளுனரை நியமிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது ? குடியரசு தலைவர்

2.உலகின் ஆழமான அகழி எது ? மரியனா

3.மரியனா அகழி எப்பெருங்கடலில் உள்ளது ? பசிபிக்

4.இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை யார் ? விக்ரம் சாரா பாய்

5.மரபனு மாற்றம் செய்யப்பட்ட வறட்சியை தாங்கும் எச்.பி 4 கோதுமை வகைக்கு அனுமதி அளித்த முதல் நாடு எது ? அர்ஜென்டினா

6.உலகின் நீளமான கடற்கரை எது ? மியாமி

7.எந்த நகரம் அழியா நகரம் என்று அழைக்கப்படுகிறது ? ரோம்

8.தமிழ்நாட்டில் தோல் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் முதன்மை வகித்த மாவட்டம் எது ? வேலூர்

9.1877 ஆண்டு ஒலிப்பதிவு சாதனத்தை கண்டுப்பிடித்தவர் யார் ? தாமஸ் ஆல்வா எடிசன்

10.இரைப்பை சார் உடற் செயலின் தந்தை ? வில்லியம் பியூமான்ட்

11.மக்கள் தொகை அடிப்படையில் தமிழகம் இந்தியாவில் 7 வது மாநிலமாக உள்ளது.

12.முதல் திருவந்தாதி நூல் ஆசிரியர் பொய்கை ஆழ்வார்

13.கால்நடை கணக்கெடுப்பு எத்தனை வருட இடைவெளியில் மேற்கொள்ளப்படுகிறது ? 5

14.பொருளாதார ரீதியாக பின்தங்கிய பெண்களை மேம்படுத்தும் திட்டத்தை எந்த மாநிலம் துவங்கியுள்ளது ? அசாம்

15. Which is the largest zone in India? Northern railways

16. Thudiyurulippara hill, which was announced as biodiversity heritage site located in which state? Kerala.

17. world nature conservation day on July 28

18. Who is planning to sent humans to moon? NASA

19. ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் விமானி யார் ? ஷிவாங்கி சிங்

போட்டி தேர்விற்கு தயாராகும் மாணாக்கர்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகின்றேன்.

நன்றி

திரைக்கடல்

நேற்றைய செய்தி இன்றைய நாளிதழ்களில் -12.10.20

 நேற்றைய செய்தி இன்றைய நாளிதழ்களில் -12.10.20

1.கிராமப்புற மக்களுக்கு அவர்கள் அவர்களின் தனிப்பட்ட சொத்துகளின் உரிமையை அங்கீகரிக்கும் வகையில் ஸ்வமித்வா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

2.ரெயில்வே வாரியத் தலைவர் வி.கே யாதவ் தெரிவித்தார் அறிக்கையில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் ஏசி இல்லாத பெட்டிகள் நீக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

3. பிரெஞ்ச் ஓபன மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் 19 வயது இகா ஸ்வியாடெக் கிராண்ட ஸ்லாம் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.

4. உலக மகளிர் அணியின் டி20 சேலஞ்ச் நடைபெற உள்ளது டிரெயல் பிளேசரல் அணியில் இடம்பெற்றுள்ள நத்தகன் சாந்தம் இந்த தொடரில் விளையாடும் முதல் தாய்லாந்து வீராங்கனை.

5.பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 13ஆவது முறையாக கோப்பையை வென்றால் ரபேல் நாடல்.

6. தொழில் வளர்ச்சிக்காக தமிழக மாவட்டங்கள் மூன்று பிரிவாக பிரிப்பு

A பிரிவு : சென்னை , காஞ்சிபுரம், திருவள்ளூர் , செங்கல்பட்டு .

B பிரிவு : கோவை , கிருஷ்ணகிரி , கடலூர் , கரூர் , நாமக்கல் , திருப்பூர் ,திருச்சி ,வேலூர்.

c பிரிவு : காவரி டெல்டா மாவட்டங்கள் , விழுப்புரம் , திருவண்ணாமலை ,கள்ளகுறிச்சி (10 தென் மாவட்டங்கள் )

தொழில் முனைவோர் முதலீட்டாளர்களை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

200 முதல் 500 கோடி வரை முதலீட்டாளர்கள் large-scale

500 கோடிக்கு மேல் மெகா ஸ்கேல்

6. அக் 11 சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை ஒட்டி ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக ஆந்திர மாணவி கஸ்தூர்பா காந்தி ஆனந்தபுரம் மாவட்டத்தின் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்தார்.

7 . இந்தியாவிற்காக ஒரு நாள் பிரிட்டன் தூதராக டெல்லியைச் சேர்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் நியமிக்கப்பட்டார்.

உலக ஆர்திரட்டிஸ் தினம் .

சர்வதேச மூட்டு அழற்சி நோய் தினம் அல்லது உலக ஆர்த்ரிடிஸ் தினமாக 1996 ஆண்டிலிருந்து அக்டோபர் 12 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது அத்தினம் கீல்வாதம் மற்றும் தசை நோய்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகிறது.

சிறப்பு

  • 1792 - கொலம்பசு நாள் முதல் தடவையாக நியூயார்க் நகரில் கொண்டாப்பட்டது.
  • 1993 - இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் அமைக்கப்பட்டது.

பிறப்பு

  • 1918 கே கே பிர்லா .
  • 1935 சிவராஜ் பாட்டீல் .

போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவியர்களுக்கு பயன் அளிக்கும் என்று நம்புகிறேன் .

நன்றி

theeraikadal.blogspot.com

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

இந்திய ஆறுகள் – சில தகவல்கள்


இந்திய ஆறுகள் பற்றிய சில தகவல்கள் – நீளம், பரப்பு, ஆற்றின் பிறப்பிடம் – கலக்குமிடம் மற்றும் பயனடையும் பகுதி ஆகியவற்றைப் பார்ப்போம்.

சிந்து

நீளம் – 3100 கி.மீ

பரப்பு – 3,21,290 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – கைலாய மலைத் தொடர்

கலக்குமிடம் – அரபிக்கடல்

பயனடையும் பகுதி – இந்தியா, பாகிஸ்தான்

கங்கை

நீளம் – 2480 கி.மீ

பரப்பு – 3,37,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – கங்கோத்ரி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – உத்திரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம்

யமுனை

நீளம் – 1370 கி.மீ

பரப்பு – 3,59,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – யமுனோத்ரி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – டெல்லி, ஹரியானா, உத்திரபிரதேசம்

பிரம்மபுத்திரா

நீளம் – 916 கி.மீ (இந்தியாவில்)

பரப்பு – 2,40,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – ஆங்சி பனியாறு, மானசரோவர் ஏரி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – வடகிழக்கு மாநிலங்கள்

நர்மதை

நீளம் – 1312 கி.மீ

பரப்பு – 98,796 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – அமர்கண்டாக் மலை

கலக்குமிடம் – அரபிக்கடல்

பயனடையும் பகுதி – மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா

தபதி

நீளம் – 724 கி.மீ

பரப்பு – 65,145 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – பெட்டூல்

கலக்குமிடம் – அரபிக்கடல்

பயனடையும் பகுதி – மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா

மகாநதி

நீளம் – 858 கி.மீ

பரப்பு – 1,41,600 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – அமர்கண்டா பீடபூமி

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – சட்டிஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா

கோதாவரி

நீளம் – 1465 கி.மீ

பரப்பு – 3,12,812 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – நாசிக் குன்றுகள்

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – ஆந்திரப்பிரதேசத்தின் தென்கிழக்குப்பகுதி, ஒடிசா

கிருஷ்ணா

நீளம் – 1400 கி.மீ

பரப்பு – 2,59,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – மகாபலேஸ்வரர் மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்

காவிரி

நீளம் – 800 கி.மீ

பரப்பு – 87,900 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – குடகுமலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – கர்நாடகம், தமிழ்நாடு

பெரியாறு

நீளம் – 244 கி.மீ

பரப்பு – 5,398 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – கார்டமன் மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – தமிழ்நாடு, கேரளா

வைகை

நீளம் – 240 கி.மீ

பரப்பு – 7,000 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – மேற்கு தொடர்ச்சி மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – தமிழ்நாடு, கேரளா

தாமிரபரணி

நீளம் – 123 கி.மீ

பரப்பு – 4,400 ச.கி.மீ

ஆற்றின் பிறப்பிடம் – அகத்தியர் மலை

கலக்குமிடம் – வங்காளவிரிகுடா

பயனடையும் பகுதி – தமிழ்நாடு.

போட்டி தேர்விற்க்கு தயாராகும் மாணக்கர்களுக்கு இது பயன் படும் என்று நம்புகின்றேன்.

அரசு வேலை மட்டுமே நமது இலக்கு.

நன்றி

திரைக்கடல்

11.10.2020 தினசரி செய்திகள்

 

1.முன்னாள் சோவியத் நாடான அசர்பைஜான் -அர்மீனியா 30 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய நாகர்னோ-காராபாக் பகுதியில் யுத்தம் நடந்து வருகிறது .

  • ரஷ்ய அதிபர் புடின் அழைப்பை ஏற்று அசர்பைஜான் அதிபர் பர் இலாம் அலியேவ் , அர்மீனியா பிரதமர் நிகோல் பாஷினியன் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிருத்தப்பட்டது.

2.குறிப்பாக பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்ட வழிமுறைகளை மாநில அரசுகள் வலுப்படுத்த வேண்டும்.

  • அதாவது பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடந்தால் போலீஸார் கண்டிப்பாக சிஆர்பிசி 154 பிரிவு 1-ன் கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வேண்டும். ஒருவேளை பாதிக்கப்பட்ட பெண் சொந்த ஊரின் காவல் எல்லைக்கு அப்பால் பாதிக்கப்பட்டு அல்லது வேறு மாநிலத்தில் பாலியல் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டு, சொந்த ஊர் காவல் நிலையத்தில் புகார் அளித்தால், போலீஸார் உடனடியாக ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும்.
  • பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய தாமதித்தாலோ அல்லது மறுத்தாலோ ஐபிசி பிரிவு 166-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமல்லாமல் உட்பிரிவு 326 ஏ,பி, பிரிவு 354,354 பி, 370, 376, 376ஏ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
  • சிஆர்பிசி பிரிவு173-ன் கீழ் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை போலீஸார் இரு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். வழக்குகளின் நிலவரம், விசாரணை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஐடிஎஸ்எஸ்ஏ இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அந்த விசாரணை நிலவரம் கண்காணிக்கப்படும்.
  • பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்கள், பெண் குழந்தைகள் சிஆர்பிசி பிரிவு164-ன் கீழ் குற்றம் நடந்த 24 மணி நேரத்துக்குள் பதிவு பெற்ற அரசு மருத்துவரிடம் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.
  • மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாதிக்கப்பட்டவர் இறக்கும் தறுவாயில் இருந்தால், வாக்குமூலத்தை எழுத்து மூலமோ அல்லது வாய்மொழியாகவோ கேட்டு இந்திய ஆதாரச் சட்டம் 1872 பிரிவு 32(1) ன் கீழ் போலீஸார் பதிவு செய்ய வேண்டும்.
  • பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து தடயங்களைச் சேகரித்தல், ஆதாரங்களைச் சேகரித்தல் போன்றவற்றில் விசாரணை அதிகாரிக்கும், மருத்துவர்களுக்கும் ஏற்கெனவே போதுமான வழிகாட்டல்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.
  • இந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், குறிப்பாக பாலியல் குற்றத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுத்தும் போலீஸார், அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்''.

3.அட்டப்பாடியில் ஓலைக் குடிசையில் குழந்தைகளுக்குப் பாடம் எடுக்கும் பழங்குடி மாணவி அனாமிகா யூத் ஐகான் விருதுக்கும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நிகழ்வுகள்

பிறந்த நாள்

இறப்பு

சிறப்பு நாள்

இந்தியாவின் முதல் திருநங்கை நீதிபதி ஜோயிதா மண்டல் .

போட்டி தேர்விற்க்கு தயாராகும் மாணக்கர்களுக்கு பயன் படும் என்று நம்புகின்றேன்.

அரசு வேலை மட்டுமே நமது இலக்கு.

நன்றி

theeraikadal.blogspot.com

கண் பேசும் வார்த்தைகள்

புத்தக பரிந்துரை: கண் பேசும் வார்த்தைகள் ஆசிரியர்: கவிஞர் நா.முத்துக்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் விலை 99 நூலங்காடி : used tamilboo...